புற்றுநோய் அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்பட்டார் கன்னட நடிகர் சிவ ராஜ்குமார்
கன்னட நடிகர் சிவராஜ்குமார் சமீபத்தில் தனது உடல்நிலை குறித்து மனம் திறந்திருந்தார். அதில் ஒரு தீவிர நோய்க்கு (புற்று நோய் சார்ந்த) சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார். இதற்கான அறுவை சிகிச்சைக்காக தற்போது அவர் அமெரிக்கா சென்றுள்ளார். அவர் புறப்படுவதற்கு முன் ஊடகங்களிடம் பேசிய சிவ ராஜ்குமார், உணர்ச்சிவசப்பட்டு, தனது சிகிச்சையின் விவரங்களைப் பகிர்ந்து கொண்டார். அப்போது ரசிகர்கள் மற்றும் நலன் விரும்பிகளிடமிருந்து தனக்குக் கிடைத்த அபரிமிதமான அன்பு மற்றும் ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார். அவரது பயணத்திற்கு முன்னர், சக கன்னட நடிகர் கிச்சா சுதீப், சிவ ராஜ்குமாரின் இல்லத்திற்குச் சென்று அவர் பூரண நலம் பெற்று திரும்பி வர வாழ்த்து தெரிவித்தார்.
Twitter Post
Twitter Post
Twitter Post
சிகிச்சை குறித்த விவரங்களை தெரிவித்த கன்னட சூப்பர்ஸ்டார்
செய்தியாளர் சந்திப்பின் போது, சிவ ராஜ்குமார் அமெரிக்காவில் சிகிச்சை பெறுவது குறித்த விவரங்கள் குறித்து விரிவாகப் பேசினார். மியாமி கேன்சர் இன்ஸ்டிடியூட்டில் (எம்சிஐ) டிசம்பர் 24 ஆம் தேதி தனது அறுவை சிகிச்சை திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அவர் தனது மருத்துவரைப் பற்றி பேசுகையில், "டாக்டரின் பெயர் முருகேஷ் என் மனோகர். அவர் மிகவும் பிரபலமான புற்றுநோயியல் நிபுணர். அவருக்கு நல்ல, அதிர்ஷ்டமான கை உள்ளது. நான் அவரிடம் பேசியபோது, எதற்கும் கவலைப்பட வேண்டாம் என்று கூறினார், மேலும் செயல்முறை தடையின்றி நடக்கும் என்று எனக்கு உறுதியளித்தார்" என்றார்.
பயணம் சற்று பதட்டத்தை தருகிறது என்பதை ஒப்புக்கொண்ட சிவராஜ்குமார்
நிருபர்களிடம் பேசிய சிவ ராஜ்குமார், ரசிகர்கள் பீதி அடைய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். அதே நேரத்தில், தான் நீண்ட காலமாக வீட்டை விட்டு வெளியேறுவது குறித்து சற்று பதட்டமாக இருப்பதாகவும் அவர் ஒப்புக்கொண்டார். சிவ ராஜ்குமார் தனது உடல்நிலை அறிக்கைகள் குறித்த நேர்மறையான செய்திகளையும் பகிர்ந்து கொண்டார். "கடந்த இரண்டு நாட்களில் நாங்கள் மருத்துவர்களிடம் இருந்து எடுத்த அனைத்து அளவுருக்களிலும், இதய துடிப்பு, இரத்த பரிசோதனைகள் அல்லது சிறுநீர் பரிசோதனைகள் என அனைத்தும் மிகவும் நேர்மறையானவை, அது எனக்கு தைரியத்தை அளித்துள்ளது," என்று அவர் கூறினார். சுமார் ஒரு மாதம் அமெரிக்காவில் தங்கி, ஜனவரி 26, 2025 அன்று இந்தியாவுக்குத் திரும்பத் திட்டமிட்டுள்ளதாக சிவ ராஜ்குமார் வெளிப்படுத்தினார்.