கன்னட இயக்குனர்- நடிகர் துவாரகிஷ் பெங்களூருவில் காலமானார்
செய்தி முன்னோட்டம்
பிரபல கன்னட நடிகரும், தயாரிப்பாளரும், இயக்குனருமான துவாரகிஷ், இன்று ஏப்ரல் 16, காலை காலமானார். அவருக்கு வயது 81.
துவாரகிஷிற்கு சுவாசக் கோளாறு இருந்ததாகவும், அதன் காரணமாகவே அவர் காலமானார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அவரது மரணம், அவருடைய ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் சக சினிமா ஊழியர்களை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
தவராகிஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் நெருங்கிய நண்பராகவும் அறியப்பட்டவர். தமிழில் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, சில்க் ஸ்மிதா ஆகியோர் நடித்த 'அடுத்த வாரிசு' படத்தை அவர்தான் தயாரித்துள்ளார்.
அதே போல் ரஜினிகாந்தின், 'நான் அடிமை இல்லை' படத்தை, அவரே இயக்கி தயாரித்துள்ளார்.
அவரின் இறப்பிற்கு ரஜினிகாந்த், அணில் கும்ப்ளே, பிருத்வி அம்பர் போன்றவர்கள் தங்கள் இரங்கல்களை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
embed
நடிகர் துவாரகிஷ் காலமானார்
The demise of my long time dear friend Dwarakesh is very painful to me..starting his career as a comedian, he raised himself up to being a big producer and director.. fond memories come to my mind..my heartfelt condolences to his family and dear ones..— Rajinikanth (@rajinikanth) April 16, 2024
embed
நடிகர் துவாரகிஷிற்கு இரங்கல்
Deeply saddened by the passing of veteran actor Dwarakish Sir - A doyen of Kannada film industry. Grew up watching his movies. His contribution to the film world will always be remembered. 🙏🏽— Anil Kumble (@anilkumble1074) April 16, 2024