மற்றொரு பான்-இந்தியா படத்தில் கமல்ஹாசன்; இம்முறை அட்லீ உடன் இணைகிறார்
இந்திய சினிமாவையே மாற்றியமைக்கும் ஒரு குறிப்பிடத்தக்க மெகா பிளான் ஒன்றை இயக்குனர் அட்லீ திட்டமிட்டு வருவதாக ஏற்கனவே தெரிவித்திருந்தோம். இந்தியாவின் இரண்டு பெரிய சூப்பர் ஸ்டார்களான சல்மான் கான் மற்றும் கமல் ஆகியோரை வைத்து ஒரு டபுள் ஹீரோ திரைப்படத்தை இயக்க அவர் தயார் ஆகி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு (2025) தொடங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெயரிடப்படாத இப்படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. கமல் ஹாசன் தொடர்ச்சியாக இளம் இயக்குனர்களுடன் கை கோர்த்து பான் இந்தியா படங்களில் நடிக்க கவனம் செலுத்து வருகிறார். விக்ரம் படத்திற்காக லோகேஷ் கனகராஜ், கல்கி படத்திற்காக நாக் அஸ்வினை தொடர்ந்து அவர் அட்லீ உடன் இணையவுள்ளார்.