Page Loader
கமல்ஹாசன்- மணிரத்னத்தின் தக் லைஃப் ஷூட்டிங் இறுதி கட்டத்தை எட்டியது
இன்னும் 25 நாட்களே படப்பிடிப்பு பாக்கி

கமல்ஹாசன்- மணிரத்னத்தின் தக் லைஃப் ஷூட்டிங் இறுதி கட்டத்தை எட்டியது

எழுதியவர் Venkatalakshmi V
Jul 18, 2024
02:13 pm

செய்தி முன்னோட்டம்

உலக நாயகன் கமல்ஹாசன், 'நாயகன்' படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயக்குனர் மணிரத்தினதுடன் இணைந்துள்ள திரைப்படம் தான் 'தக் லைஃப்'. இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் 25 நாட்களே படப்பிடிப்பு பாக்கி உள்ளதென ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. ஏனைய நடிகர்களின் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்டதாகவும், கமல்ஹாசன் 'இந்தியன் 2' ப்ரோமோஷன் வேளைகளில் இருந்ததால், அவருடைய காட்சிகள் மட்டுமே மீதம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. எப்படியும் ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்பு நிறைவு பெற்று விடும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

சீக்குவல்

நாயகன் படத்தின் தொடர்ச்சியாக இருக்குமா இந்த படம் என்ற பேச்சும் உலவுகிறது

இது நாயகனின் சீக்குவலாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. காரணம், இப்படத்தில் கமல்ஹாசனின் பெயர், 'ரங்கராய சக்திவேல் நாயக்கர்'- நாயகன் படத்தில் அவருடைய பெயரும் சக்திவேல் நாயக்கர் தான். இப்படத்தில் மற்றுமோர் சுவாரசியம், இப்படத்திற்கான திரைக்கதையை மணிரத்தினதுடன் இணைந்து கமல்ஹாசனும் எழுதியுள்ளார். முன்னதாக இப்படத்தில் ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் ஆகியோர் நடிக்கவிருந்தனர். ஆனால் தற்போது அவர்கள் கதாபாத்திரத்திற்கு சிலம்பரசன், அசோக் செல்வன் நடித்து வருகின்றனர். இவர்களோடு, ஜோஜு ஜார்ஜ், த்ரிஷா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைத்துள்ளது இசைபுயல் ஏ.ஆர். ரஹ்மான் ஆவார்.