Loading...
இந்தியன் 3 மீண்டும் தொடங்குகிறதா? கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியின் பிரம்மாண்ட அப்டேட்
'இந்தியன் 3' படத்தின் பணிகள் விரைவில் மீண்டும் தொடங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

இந்தியன் 3 மீண்டும் தொடங்குகிறதா? கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியின் பிரம்மாண்ட அப்டேட்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 11, 2026
04:24 pm

செய்தி முன்னோட்டம்

நீண்ட இடைவெளி மற்றும் பல்வேறு கட்ட இழுபறிகளுக்கு பிறகு, உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் பிரம்மாண்ட திரைப்படமான 'இந்தியன் 3' படத்தின் பணிகள் விரைவில் மீண்டும் தொடங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 'இந்தியன் 2' படத்தின் கதையமைப்பை தொடர்ந்து, அதன் நேரடித் தொடர்ச்சியாகவே இத்திரைப்படம் அமையவுள்ளது. சன் நியூஸ் வெளியிட்ட தகவலின்படி, 'இந்தியன் 2' படப்பிடிப்பின் போதே 'இந்தியன் 3' படத்திற்கான பெரும்பாலான முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. எனவே, இன்னும் சில சிறிய அளவிலான பேட்ச் வொர்க் படப்பிடிப்பு மட்டுமே எஞ்சியுள்ளது.

தற்போதைய நிலை

படத்தின் தற்போதைய நிலை மற்றும் திரைப்படத் தொடர் பின்னணி

படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் இருந்தாலும், படத்தின் காட்சி அமைப்புகளுக்கான பிரம்மாண்ட சிஜிஐ (Visual Effects) பணிகள் இன்னும் பெருமளவில் பாக்கியுள்ளன.

படப்பிடிப்பு மீண்டும் தொடங்குவது மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தயாரிப்புத் தரப்பிடம் இருந்து விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.

1996-இல் வெளியான முதல் பாகம் இந்திய சினிமாவில் மாபெரும் வெற்றிபெற்று ஒரு கிளாசிக் திரைப்படமாக உருவெடுத்தது.

28 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான இரண்டாம் பாகத்தில் கமல்ஹாசன் மீண்டும் 'சேனாபதி' (இந்தியன் தாத்தா) கதாபாத்திரத்தில் நடித்தார்.

சித்தார்த், எஸ்.ஜே. சூர்யா, ரகுல் பிரீத் சிங் உள்ளிட்டோர் நடித்த இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

தற்போது மூன்றாம் பாகத்தின் பணிகள் வேகம் பெறவுள்ளது கமல் ரசிகர்களிடையே மீண்டும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT