Page Loader
நடிகர் சூர்யாவுடன் ஜோடி சேரும் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்
ஜான்வி கபூர், ஜூனியர் NTR உடன், 'தேவரா' என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்

நடிகர் சூர்யாவுடன் ஜோடி சேரும் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 20, 2024
09:27 am

செய்தி முன்னோட்டம்

பாலிவுட்டின் பிரபல நடிகையும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுமான ஜான்வி கபூர், சூர்யாவுடன் ஒரு ஹிந்தி படத்திலும், ராம் சரண் உடன் மற்றொரு படத்திலும் நடிக்கிறார் என்று அவரது தந்தையும், தயாரிப்பாளருமான போனி கபூர் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியின்போது, இந்த தகவலை பகிர்ந்துள்ளார். இதனிடையே, சூர்யா, மஹாபாரத கதை ஒன்றில், கர்ணன் வேடத்தில் நடிக்கவுள்ளார் என இரு தினங்களுக்கு முன்னர் செய்தி வெளியானது. இது சூர்யாவின் நேரடி முதல் ஹிந்தி படமாக இருக்கும் எனவும் கூறப்பட்டது. ஒருவேளை ஜான்வி கபூர் இந்த படத்தில் இணைகிறாரா என்பது குறித்து தகவல் இல்லை. தற்போது ஜான்வி கபூர், ஜூனியர் NTR உடன், 'தேவரா' என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

ட்விட்டர் அஞ்சல்

சூர்யாவுடன் ஜோடி சேரும் ஜான்வி கபூர்