சிவகார்த்திகேயனுடன், இசையமைப்பாளர் இமான் மோதலுக்கு காரணம், அவரது மாஜி மனைவியா?
நேற்று இசையமைப்பாளர் இமானின் பேட்டி ஒன்று வைரலானது. அதில், நடிகர் சிவகார்த்திகேயனுடன் இனி இந்த ஜென்மத்தில் இணைந்து பணியாற்ற மாட்டேன் என்றும், அவர் மிகப்பெரிய துரோகம் இழைத்து விட்டார் எனவும் கூறி இருந்தார். இருப்பினும், அவர் உண்மையான காரணத்தை வெளியிட மறுத்தார். இந்த நிலையில், சிவகார்த்திகேயனுடன், இமானுக்கு ஏற்பட்ட மோதலுக்கு காரணம் அவரின் மாஜி மனைவி என செய்திகள் வெளியானது. இந்நிலையில், அதை உறுதிப்படுத்தும் விதமாக, விகடன் பத்திரிகையில், இமானின் முன்னாள் மனைவி மோனிகாவின் பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. மோனிகாவின் கருத்துப்படி, தன்னிடமிருந்து விவாகரத்து பெறும் முன்னரே, இமான் திருமணத்திற்கு பெண் பார்த்து விட்டதாகவும், தன் நண்பரின் குடும்பம் சிதையக்கூடாது என சிவகார்த்திகேயன் முயற்சித்ததாகவும் கூறியுள்ளார்.