சிவகார்த்திகேயன் துரோகம் செய்ததாக கூறும் இமான் - கோலிவுட்டில் பரபரப்பு
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று தற்போது முன்னணி நாயகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது ஆரம்பக்கால படங்களான மனம் கொத்தி பறவை, சீமராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், நம்ம வீட்டு பிள்ளை, ரஜினிமுருகன் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி.இமான். இவர்களது காம்போவில் வெளியான படத்தின் பாடல்கள் அனைத்தும் செம ஹிட். இப்படியிருக்கையில் கடந்த சில வருடங்களாகவே இவர்களது கூட்டணி எந்த படத்திலும் இணையவில்லை. அண்மை காலமாக சிவகார்த்திகேயன் பெரும்பாலான படங்களுக்கு அனிருத் தான் இசையமைத்து வருகிறார். இதற்கு என்ன காரணம் என்று தெரியாமல் இருந்த பட்சத்தில், சமீபத்தில் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த டி.இமான் இதுகுறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
'வெளிப்படையாக கூற முடியாது' - இமான்
இமான் கூறியதாவது,"இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து படம் செய்வது என்பது கடினம். அவர் எனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டார். அதை என்னால் வெளிப்படையாக கூறமுடியாது"என்றும், "அப்படி கூறினால் எனது குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும்" என்றும் கூறியுள்ளார். "உங்களிடம் இவ்வளவு பாசமாக இருந்து, உங்கள் படங்களுக்கு ஆத்மார்த்தமாக இசையமைத்து கொடுத்த எனக்கு எவ்வாறு உங்களால் இப்படி ஓர் துரோகத்தை செய்ய முடிந்தது?என்று நேரடியாகவே அவரிடம் கேட்டுவிட்டேன்"என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இமான் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்ததற்கு சிவகார்த்திகேயன் தான் காரணம் என்று ஓர்பேச்சு உலா வருகிறது. உண்மை என்ன என்பதை சிவகார்திகேயனோ அல்லது இமானோ சொன்னால் தான் தெரிய வரும். இமானின் இப்பேட்டி தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.