Page Loader
லண்டனில் சிம்பொனி இசைத்து வரலாறு படைத்தார் இசைஞானி இளையராஜா
லண்டனில் சிம்பொனி இசைத்து வரலாறு படைத்தார் இளையராஜா

லண்டனில் சிம்பொனி இசைத்து வரலாறு படைத்தார் இசைஞானி இளையராஜா

எழுதியவர் Sekar Chinnappan
Mar 09, 2025
12:28 pm

செய்தி முன்னோட்டம்

இசைஞானி இளையராஜா லண்டனில் தனது முதல் சிம்பொனி நிகழ்ச்சியின் மூலம் பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தினார். இது இந்திய இசையில் ஒரு வரலாற்று சாதனையாகும். இந்த நிகழ்வு பிரிட்டனின் லண்டனில் உள்ள ஈவென்டிம் அப்பல்லோவில் நடந்தது. இதில் இசைஞானி மதிப்புமிக்க ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவுடன் இணைந்து சிம்பொனியை இசைத்தார். ரசிகர்கள் இந்த இசை நிகழ்ச்சியை இந்திய நேரப்படி அதிகாலை 12:30 மணிக்குக் கண்டனர். தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் பிறந்த இளையராஜாவின் இசைப் பயணம் அவரது சகோதரர் பாவலர் வரதராஜனின் வழிகாட்டுதலின் கீழ் தொடங்கியது. சென்னையில் இசை பயிற்றுவிப்பாளர் தன்ராஜ் மாஸ்டரால் ஊக்குவிக்கப்பட்ட அவர், மேற்கத்திய பாரம்பரிய இசையில் தேர்ச்சி பெற்றார். இறுதியில் உலகின் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவரானார்.

35 நாட்கள்

35 நாட்களில் சிம்பனியை எழுதிய இளையராஜா

லண்டன் நிகழ்ச்சியில் வேலியண்ட் என்ற தலைப்பில் அவரது முதல் சிம்பொனி இடம்பெற்றது. அதை அவர் வெறும் 35 நாட்களில் உருவாக்கினார். இந்த சாதனை, இவ்வளவு மதிப்புமிக்க உலகளாவிய மேடையில் சிம்பொனியை அறிமுகப்படுத்திய முதல் இந்தியர் என்ற பெருமையை அவருக்கு அளிக்கிறது. 90 நிமிட நிகழ்வில் 45 நிமிட சிம்பொனி பகுதியும் இடம்பெற்று. பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது. இந்த இசை நிகழ்ச்சியில் அவரது மகன்கள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட புகழ்பெற்ற பிரபலங்களும், திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பால்கியும் கலந்து கொண்டனர். ரசிகர்கள் இளையராஜாவுக்கு சிறப்பான வரவேற்பை அளித்ததால், அரங்கில் இருந்த சூழல் மிகவும் உற்சாகமாக இருந்தது.