
தனுஷ் இயக்கவிருக்கும் அடுத்த படத்தின் ஹீரோ இவர்தான்!
செய்தி முன்னோட்டம்
நடிகர் தனுஷ் தன்னுடைய அடுத்த படத்தை இயக்க தீவிரமாக தயாராகி வருவதாக தெரிகிறது.
அவருடைய இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'ராயன்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
படம் எதிர்பார்த்ததை விட அதிக வசூல் செய்தது.
தனுஷின் இயக்குனர் தாகம் ஓய்ந்தபாடில்லை. அடுத்ததாக அவருடைய மருமகனை வைத்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இதற்கு அடுத்ததாக நித்யா மேனனை நாயகியாக வைத்து ஒரு படத்தை இயக்கபோவதாக கூறப்பட்டது.
இதனை நடிகர் பிரகாஷ் ராஜும் உறுதி செய்த நிலையில், அப்படத்தின் நாயகன் தற்போது உறுதி ஆகியுள்ளது.
நடிகர் அருண் விஜய் தான் ஹீரோ. இந்த பெயரிடப்படாத படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#CineUpdates "தனுஷ் இயக்கத்தில் நடிக்கும் அருண் விஜய்: அடுத்த ஆண்டு தொடங்கும் படப்பிடிப்பு!"#Dhanush | #ArunVijay | #KollywoodNews | #TamilCinema | #UpcomingMovies | #DirectorDhanush | #FilmShoot | #KollywoodBuzz | #CineUpdates pic.twitter.com/4nJtGgJTDV
— Snap News 24x7 (@Snapnews24x7) September 11, 2024