
'தெய்வ திருமகள்' சாரா அர்ஜுன் பாலிவுட்டில் ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாகிறார்!
செய்தி முன்னோட்டம்
குழந்தை நட்சத்திரமாக தமிழில் 'தெய்வத் திருமகள்' படத்தில் நெஞ்சை நெகிழ வைத்த சாரா அர்ஜுன், இப்போது பாலிவுட்டில் முன்னணி நடிகர் ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக நடித்து வருகிறார். அவர்களின் புதிய படம் 'துரந்தர்' - இதன் டீஸர் நடிகர் ரன்வீர் சிங் பிறந்த நாளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2011-ல் விக்ரம் நடிப்பில் வெளிவந்த 'தெய்வத் திருமகள்' திரைப்படத்தில் தனது அழுத்தமான நடிப்பால் அனைவரையும் பாதித்த சிறுமி சாரா அர்ஜுன். அதன் பின்னர் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்திருந்தார். இப்போது, 'துரந்தர்' படத்தில் ரன்வீர் சிங்குடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகளில் வருகிறார் என்பதுதான் ரசிகர்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்பார்ப்பு
'துரந்தர்': பல நட்சத்திரங்கள் நடிப்பதால் அதிகரிக்கும் மிகுந்த எதிர்பார்ப்பு
இயக்குநர் ஆதித்யா தர் (Uri: The Surgical Strike புகழ்) இயக்கும் இந்தப் படத்தில் ரன்வீர் சிங் மற்றும் சாரா அர்ஜுன் தவிர, சஞ்சய் தத், அக்ஷய் கண்ணா, மாதவன், அர்ஜுன் ராம்பால் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் இடம்பெற்றுள்ளனர். டீஸரில், மிஸ்டரி, ஆக்ஷன், மற்றும் ட்ராமா நிறைந்த காட்சிகள் இடம்பிடித்துள்ளன. இது ரசிகர்களிடையே திரைப்படத்தின் கதையைப் பற்றிய உணர்வுப் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது. ஜியோ ஸ்டுடியோஸ் வழங்க, P62 Studios சார்பில் ஜோதி தேஷ் பாண்டே மற்றும் லோகேஷ் தர் ஆகியோர் தயாரிக்கும் இப்படம், "தெரியாத மனிதர்களின் சொல்லப்படாத கதை" என்ற மையக் கருவை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வருகிறது என படக்குழு தெரிவித்துள்ளது.