Loading...
'பத்தா படத்தை ஆஸ்கருக்கு கொண்டு செல்வேன்,தமிழில் பேசுவேன்': அட்லீ உறுதி
பத்தா படத்திற்கான ஆஸ்கர் விருது மேடையில் தமிழில் பேசுவேன் என அட்லீ உறுதி

'பத்தா படத்தை ஆஸ்கருக்கு கொண்டு செல்வேன்,தமிழில் பேசுவேன்': அட்லீ உறுதி

எழுதியவர் Vasuki
Oct 06, 2026
02:17 pm

செய்தி முன்னோட்டம்

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில், 'ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ்' மற்றும் 'சினி1 ஸ்டுடியோஸ்' சார்பில் அட்லீ வழங்கிய 'பத்தா' திரைப்படம் கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டைப் பெற்று மாபெரும் வெற்றி நடை போட்டு வருகிறது. இந்நிலையில், படத்தின் வெற்றி விழாவில் கலந்துகொண்ட அட்லீ, மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை உலக அரங்கில் ஆஸ்கர் விருது மேடை வரை கொண்டு செல்வதே இலக்கு என்று அறிவித்தார்.

ஆஸ்கார் விருது

"தமிழ் சினிமாவின் பெருமை"

வெற்றி விழாவில் நெகிழ்ச்சியுடன் பேசிய அட்லீ, "நான் பள்ளிப் பருவத்தில் படிக்கும்போது ஷாருக்கான் உடனும் தளபதி விஜய் அண்ணாவுடனும் படம் பண்ணுவேன் என்று யாரிடமாவது சொல்லியிருந்தால் என்னை அனைவரும் பார்த்து சிரித்திருப்பார்கள்".

"ஆனால் விடாமுயற்சியால் அதை நான் நிஜமாக்கிக் காட்டினேன். அதே தைரியத்துடனும் உறுதியுடனும் சொல்கிறேன், விஜய் சேதுபதியின் 'பத்தா' படத்தை ஆஸ்கார் விருது வரை எப்படியாவது கொண்டு செல்ல விரும்புகிறேன்".

"அந்த மேடையில் நின்று தமிழ் சினிமாவின் பெருமையை நிலைநாட்ட என்னால் முடிந்த அனைத்து வேலைகளையும் நிச்சயம் செய்வேன்" என்று கூறினார்.

மேடை உரை

"தமிழில் உரையாற்றுவேன்"

தொடர்ந்து பேசிய அவர், "ஹாலிவுட் என்பது ஒன்றும் எட்ட முடியாத தூரம் கிடையாது. நாம் மிக எளிதாக அங்கே செல்ல முடியும். நம்மால் நிச்சயம் அதைச் சாதிக்க முடியும்".

"அகாடமி விருது வழங்கும் ஆஸ்கர் மேடையில் எனக்குப் பேசும் வாய்ப்பு கிடைத்தால், அங்கு நான் ஆங்கிலத்தில் பேச மாட்டேன்".

"என் தாய்மொழியான செம்மொழி தமிழிலேயே உரையாற்றுவேன்" என்று உணர்ச்சி பொங்க குறிப்பிட்டார்.

ADVERTISEMENT