Page Loader
'கூலி' படத்தில் அமீர்கானின் கதாபாத்திரம் வெளியானது!
'கூலி' படத்தில் அமீர்கானின் கதாபாத்திரம் வெளியானது!

'கூலி' படத்தில் அமீர்கானின் கதாபாத்திரம் வெளியானது!

எழுதியவர் Venkatalakshmi V
Jul 03, 2025
07:25 pm

செய்தி முன்னோட்டம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரைக்கு வரவிற்கும் திரைப்படம் 'கூலி'. இப்படம் வெளியீட்டிற்கு தயாராகி வரும் நேரத்தில் கடந்த வாரம் படத்தின் முதல் பாடலின் வீடியோ வெளியானது. படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. இப்படத்தில் பல நட்சத்திர நடிகர்கள் நடிப்பதிலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ரஜினியுடன் இந்த படத்தில், நாகார்ஜுனா, ஷோபின், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் ஆகியோருடன் முக்கிய வேடத்தில் அமீர்கான் நடிக்கிறார். இதனை அவரே ஒரு பேட்டியில் உறுதிப்படுத்திய நிலையில், இன்று அவருடைய கதாபாத்திரத்தின் பெயர் வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர்கள். 'தாஹா' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அமீர்கான். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post