
இந்தியாவின் ஏப்ரல் மாத பாக்ஸ்ஆபீஸ் வசூலில் முதலிடத்தில் அஜித்தின் GBU!
செய்தி முன்னோட்டம்
ஏப்ரல் மாத வசூல் நிலவரப்படி, பாலிவுட்டின் பெரிய பட்ஜெட் படங்கள் பலவற்றையும் பின்னுக்கு தள்ளி, பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது நடிகர் அஜித்தின் 'குட் பேட் அக்லீ' திரைப்படம்.
ஆர்மாக்ஸ் மீடியாவின் ஏப்ரல் மாதத்திற்கான இந்திய பாக்ஸ் ஆபிஸ் அறிக்கையின்படி, இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் ₹183 கோடி வசூலித்து, இதுவரை அந்த ஆண்டின் அதிக வசூல் செய்த தமிழ் படமாக மாறியது.
அடுத்த இடத்தில், மோகன்லால் நடித்த மலையாளப் படமான 'துடரும்' உள்ளது.
இது உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸில் ₹148 கோடி வசூலித்துள்ளது.
இப்படத்தின் தமிழ் பதிப்பு மே 2025இல் வெளியிடப்பட்டதால், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி சந்தைகளில் இருந்து கிடைத்த படத்தின் வருவாயை மட்டுமே இந்த அறிக்கை கருத்தில் கொண்டது.
பாலிவுட் படங்கள்
பாலிவுட் படங்களை விஞ்சிய GBU
இந்தப் பட்டியலில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்த 'கேசரி அத்தியாயம்-2'(₹107 கோடி) மூன்றாவது இடத்தில் உள்ளது.
அடுத்த இடத்தில், சன்னி தியோலின் ஜாத், ₹103 கோடி வசூலித்தது.
இந்த மாதத்தின் அதிக வசூல் செய்த டாப் 10 படங்களில் துடரும், ஆலப்புழா ஜிம்கானா, மரணமாஸ் & பசூகா என நான்கு மலையாளப்படங்கள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
2025ஆம் ஆண்டின் (ஜனவரி-ஏப்ரல்) முதல் 10 வெளியீடுகளைப் பொறுத்தவரை, அனைத்து மொழி பதிப்புகளிலும் மொத்த உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸின் அடிப்படையில், விக்கி கௌஷலின் சாவா ₹693 கோடியுடன் முதலிடத்தில் உள்ளது.
அதைத்தொடர்ந்து, தெலுங்கு படமான சங்கராந்திகி வாஸ்துனம் ₹222 கோடியுடன் இரண்டாவது இடத்திலும், குட் பேட் அக்லி ₹183 கோடியுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.