
ரஜினிகாந்தின் 'லிங்கா' பட நாயகி சோனாக்ஷிக்கு இந்த மாதம் திருமணம்
செய்தி முன்னோட்டம்
பிரபல பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா, தனது காதலரான ஜாகீர் இக்பாலை வரும் ஜூன் 23ஆம் தேதி திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்.
இவர்களின் திருமணம் மும்பையில் நடைபெறவுள்ளது என இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
சோனாக்ஷியும், ஜாகிரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தாலும், பொதுவெளியில் இதுபற்றி அறிவித்ததே இல்லை.
இருப்பினும், அவர்கள் ஒருவரும் விழாக்களில் ஒன்றாகத் தோன்றுவதும், சமூக ஊடகத்தில் புகைப்படங்களை பகிர்ந்ததும், அவர்கள் காதலிக்கிறார்கள் என்பதற்கு சான்றாக இருந்தது.
பழம்பெரும் நடிகரும், அரசியல்வாதியுமான சத்ருஹன் சின்ஹாவின் மகளான சோனாக்ஷி, ரஜினிகாந்துடன் 'லிங்கா' திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து ஹிந்தி படங்களில் நடித்த சோனாக்ஷி சமீபத்தில் ப்ரைம் வீடியோவில் வெளியான 'ஹீராமண்டி' என்ற வலைத்தொடரில் அதிதி ராவ் மற்றும் மனிஷா கொய்ராளாவுடன் நடித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
காதலர் ஜாகீர் இக்பாலுடன் நடிகை சோனாக்ஷி
Sonakshi Sinha gets birthday love from rumored boyfriend Zaheer Iqbal: Is it the cutest post ever? #sonakshisinha #sonakshisinhafc #Sonakshi #ZaheerIqbal #bollywood pic.twitter.com/KZXmFII1Tr
— Mid Day (@mid_day) June 2, 2024