NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / ரேணுகாசாமி கொலை வழக்கு: காவல்துறை பிடியில் சிக்கும் கன்னட திரையுலகின் பிரபல நடிகர்கள் தர்ஷன், சிக்கண்ணா 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரேணுகாசாமி கொலை வழக்கு: காவல்துறை பிடியில் சிக்கும் கன்னட திரையுலகின் பிரபல நடிகர்கள் தர்ஷன், சிக்கண்ணா 
    இந்த வழக்கில் மற்றொரு கன்னட நடிகர் சிக்கண்ணாவையும் விசாரணைக்கு அழைத்துள்ளனர்

    ரேணுகாசாமி கொலை வழக்கு: காவல்துறை பிடியில் சிக்கும் கன்னட திரையுலகின் பிரபல நடிகர்கள் தர்ஷன், சிக்கண்ணா 

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 18, 2024
    08:40 am

    செய்தி முன்னோட்டம்

    பரபரப்பான ரேணுகாசாமி கொலை வழக்கை விசாரிக்கும் காவல்துறையினர் குழு பெங்களூருவில் உள்ள தனியார் கிளப்பில் விசாரணை நடத்த உள்ளது.

    அங்கு பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தொகுதீபா மற்றும் பிற குற்றவாளிகள், ரேணுகாசமியை கடத்தி வந்தபோது, பார்ட்டியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சம்மந்தப்பட்ட இந்த பிரபல பப், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரும் தர்ஷனின் நண்பருமான வினய் என்பவருக்கு சொந்தமானது.

    இந்த வழக்கில் மற்றொரு கன்னட நடிகர் சிக்கண்ணாவையும் பெங்களூரு போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

    ரேணுகாசாமி கொலையில் முக்கிய குற்றவாளியாக தர்ஷன் மற்றும் காதலி என கூறப்படும் பவித்ரா கவுடா உட்பட 19 பேரை போலீசார் இதுவரை கைது செய்துள்ளனர்.

    யார் இந்த சிக்கண்ணா?

    தர்ஷனுடன் கொலையில் சம்மந்தப்பட்டுள்ளாரா சிக்கண்ணா?

    கன்னட திரையுலகில் முதன்மையாக நகைச்சுவை வேடங்களில் நடிக்கும் பிரபலமான நடிகர் சிக்கண்ணா, குற்றம் நடந்த ஜூன் 8 இரவு தர்ஷனுடன் பார்ட்டியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.

    தர்ஷன், ரேணுகாசாமி அடைக்கப்பட்டிருந்த ஷெட்டிற்கு சென்று அவரை சித்திரவதை செய்வதற்கு முன்பு தர்ஷனுடன் சிக்கண்ணா இருந்ததாக நம்பப்படுகிறது.

    தற்போது அந்த பப்பின் ஓனர் வினய்யுடன், நடிகர்கள் தர்ஷன் மற்றும் சிக்கண்ணா ஆகியோர் விசாரணையின் ஒரு பகுதியாக குற்றக் காட்சியை மீண்டும் உருவாக்க தனியார் கிளப்பிற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

    ரேணுகாசாமியை குடோனில் வைத்து பூட்டிவிட்டு, அடுத்து என்ன செய்வது என்பது குறித்து ஆலோசிப்பதற்காக தர்ஷன் மீண்டும் கிளப்பிற்கு வந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கொலை
    கன்னட படங்கள்
    நடிகர்
    காவல்துறை

    சமீபத்திய

    'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது இந்தியா
    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்

    கொலை

    பாரீஸ் ஈபிள் கோபுரம் அருகே தாக்குதல்: ஒருவர் உயிரிழப்பு, இருவர் காயம்  பிரான்ஸ்
    கடந்த ஆண்டில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பதிவான மூன்று கொலைகள்- NCRB அறிக்கை வழக்கு
    'படிப்பில் திறமையானவர், மூளைச்சலவை செய்யப்பட்டார்' - கர்னி சேனா தலைவர் கொலையாளி ராஜஸ்தான்
    ராமஜெயம் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்ட நபர் திடீர் கொலை - அதிர்ச்சியில் திருச்சி  திருச்சி

    கன்னட படங்கள்

    படப்பிடிப்பில் தமிழ் ஹீரோ தன்னை துன்புறுத்தியதாக நடிகை நித்யாமேனன் பரபரப்பு குற்றச்சாட்டு தமிழ் திரைப்படம்
    கார் மோதியதால் மனைவி பலி, கணவன் படுகாயம்- பிரபல நடிகர் கைது நடிகர்
    பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனும், தென்னிந்திய சினிமாவும்- ஒரு பார்வை இயக்குனர்
    கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா தனுஷ்

    நடிகர்

    2023 Year Roundup- விருதுகள் வென்ற இந்திய சினிமாக்கள் ஒரு பார்வை திரைப்பட விருது
    நடிகர் மேத்யூ பெர்ரி கெட்டமைன் ஓவர் டோஸ்ஸால் உயிரிழந்தார்- பிரேத பரிசோதனை அறிக்கை அமெரிக்கா
    அருள்நிதியின் 'டிமான்டி காலனி 2' திரைப்படத்தின் டிரைலர் வெளியானது ட்ரைலர்
    தான் படித்த அரசுப் பள்ளியை தத்தெடுத்த காந்தாரா பட நடிகர் ரிஷப் ஷெட்டி அரசு பள்ளி

    காவல்துறை

    செங்கல்பட்டில் துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது நேர்ந்த விபரீதம் - சிறுவன் படுகாயம்  செங்கல்பட்டு
    சேலம் பெரியார் பல்கலைக்கழக முறைகேடு வழக்கில் 5 பேராசிரியர்களிடம் விசாரணை  சேலம்
    கோவாவில் வைத்து தனது 4 வயது மகனைக் கொன்றுவிட்டு சடலத்தை பெங்களூரு வரை எடுத்து வந்த சிஇஓ கைது  பெங்களூர்
    கர்நாடகா: ஹோட்டல் அறைக்குள் புகுந்து இரு வேறு மதத்தை சேர்ந்த ஜோடியை தாக்கிய 6 பேரால் பரபரப்பு  கர்நாடகா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025