ரசிகர் மன்ற நிர்வாகியை வைத்து கொலையை அரங்கேற்றிய கன்னட நடிகர் தர்ஷன்
பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா மற்றும் அவரது மனைவி பவித்ரா கவுடா ஆகியோர் பெங்களூரைச் சேர்ந்த 33 வயதான ரேணுகாசாமி கொலையில் ஈடுபட்டதாகக் கூறி நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். தர்ஷன் தனது செல்வாக்கை எப்படி பயன்படுத்தி தனது ரசிகர் மன்ற உறுப்பினர் மூலமாக இந்த கொலையை செயல்படுத்தினார் என்பது பற்றிய திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. பவித்ரா கவுடாவுக்கு ஆபாச செய்திகளை அனுப்புவதற்காக ரேணுகாசாமி போலியான இன்ஸ்டாகிராம் கணக்கை உருவாக்கியுள்ளார். தர்ஷனின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் பவித்ராவின் கள்ளத்தொடர்பு குற்றச்சாட்டுகளால் தர்ஷனின் ரசிகரான ரேணுகாசுவாமி வருத்தமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த புகார்கள், பவித்ராவுக்கு ரேணுகாசாமி அனுப்பிய ஆபாச செய்திகள் உள்ளிட்டவை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரசிகர் மன்ற உறுப்பினர் மூலமாக ரேணுகாசாமி கடத்தல்
ராகவேந்திரா, கார்த்திக், கேசவமூர்த்தி ஆகிய 3 பேரும் ரேணுகாசாமியை கொன்று உடலை வீசியதாக போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்ததால் விசாரணையில் பெரும் திருப்பம் ஏற்பட்டது. விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள், தர்ஷனின் பெயரைக் குறிப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டதாகவும், குற்றத்தினை ஏற்றுக்கொள்வதற்கும், வழக்குச் செலவுகளுக்காகவும் ரூ. 5 லட்சம் தருவதாக தர்ஷன் வாக்குறுதி அளித்ததாக கூறப்படுகிறது. போலீஸ் வட்டாரங்களின்படி, அநாகரீகமான கருத்துக்களுக்காக ரேணுகாசாமிக்கு பதிலடி கொடுக்க பவித்ரா தர்ஷனைத் தூண்டியுள்ளார். ரேணுகாசுவாமி பற்றிய தகவல்களை சேகரிக்க சித்ரதுர்காவில் உள்ள அவரது ரசிகர் மன்றத்தின் நிர்வாகியான ராகவேந்திராவை தர்ஷன் ஈடுபடுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து ரேணுகாசாமியின் மனைவி சஹானா கூறுகையில், சம்பவத்தன்று இரவு ராகவேந்திரா தனது கணவரை தனது வீட்டின் அருகேயிருந்து கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.
தர்ஷன் ரேணுகாசாமியை தாக்கியது அம்பலம்
கடத்தப்பட்ட ரேணுகாசாமி, காமாட்சிபாளையத்தில் உள்ள கொட்டகைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அங்கே தர்ஷன், ரேணுகாசுவாமியை பெல்ட்டால் தாக்கியுள்ளார். அதற்குள் அவரது கூட்டாளிகளாக செயல்பட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகள், ரேணுகாசாமியை கட்டையால் அடித்துள்ளனர். மேலும், அவர்கள் அவரை சுவரின் மீது வீசியதில் அவர் உயிரிழந்துள்ளார். பின்னர் உடலை மழை நீர் வடிகாலில் தூக்கி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் தர்ஷன் தூகுதீபா மற்றும் பவித்ரா கவுடா ஆகியோர் மைசூரில் உள்ள தர்ஷனின் பண்ணை வீட்டில் இருந்து செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு விசாரணைக்காக பெங்களூரு அழைத்து வரப்பட்டனர். தர்ஷன், பவித்ரா மற்றும் மற்ற குற்றவாளிகள் ஆறு நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.