Page Loader
வெற்றிமாறனின் படத்திற்காக 10 நாட்களில் 10 கிலோ எடையை குறைத்த நடிகர் சிலம்பரசன்
சிலம்பரசன், பத்து நாட்களுக்குள் கிட்டத்தட்ட பத்து கிலோ எடையைக் குறைத்ததாகக் கூறப்படுகிறது

வெற்றிமாறனின் படத்திற்காக 10 நாட்களில் 10 கிலோ எடையை குறைத்த நடிகர் சிலம்பரசன்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 14, 2025
12:53 pm

செய்தி முன்னோட்டம்

STR அடுத்ததாக வெற்றிமாறன் படத்தில் இணைந்து பணியாற்றவுள்ளார். 'கலைப்புலி' தாணு தயாரிக்கும் இந்த படத்திற்காக சிலம்பரசன், பத்து நாட்களுக்குள் கிட்டத்தட்ட பத்து கிலோ எடையைக் குறைத்ததாகக் கூறப்படுகிறது. STR-ன் மாற்றமும் படத்தின் சாத்தியமான சூழலும் அவரது பாத்திரம் குறித்த விவாதங்களையும் உற்சாகத்தையும் தூண்டியுள்ளன. அதிகாரப்பூர்வ தகவல்கள் குறைவாக இருந்தாலும், இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. STR- வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகவுள்ள இந்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம், இப்படம் 'வடசென்னை' யுனிவெர்சில் இணையும் என வெற்றிமாறன் தெரிவித்ததுடன். படத்திற்கான உரிமையை தனுஷ் இலவசமாக அளித்ததாகவும் வெற்றிமாறன் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இருப்பினும், இது 'வட சென்னை' படத்தின் தொடர்ச்சி அல்ல.

விவரங்கள்

சிம்பு- வெற்றிமாறன் படத்தை பற்றிய விவரங்கள்

இந்த படத்தில் நெல்சன் திலீப்குமார் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடிப்பார் என்று ஏற்கனவே ஊடக செய்திகள் தெரிவித்தன. இவரோடு நடிகர்கள் கவின் மற்றும் மணிகண்டன் ஆகியோரும் சிறப்பு வேடங்களில் நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'வட சென்னை' படத்தில் நடித்த ஆண்ட்ரியா ஜெரமியா, சமுத்திரக்கனி மற்றும் கிஷோர் ஆகியோரும் இந்த பெயரிடப்படாத படத்தில் மீண்டும் தங்கள் வேடங்களில் நடிப்பார்கள். சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான 'தக் லைஃப்' திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி, பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் எப்படியாவது ஹிட் கொடுக்க வேண்டும் என்கிற கட்டாயத்தில் இருக்கும் சிம்பு, தனது 49வது படத்தில் வெற்றிமாறனுடன் இணைகிறார்.