நள்ளிரவு சர்ப்ரைஸாக வெளியான அஜித்தின் விடாமுயற்சி டீசர்; 'கடவுளே அஜித்தே..' என ரசிகர்கள் கொண்டாட்டம்
ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருந்த 'விடாமுயற்சி' டீசர் நேற்று இரவு வெளியானது. இரவு 11:08 மணியளவில் இந்த டீசர் வெளியானது. லைகா தயாரிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம், வரும் 2025 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல மாதங்களாக உருவாகி வந்த விடாமுயற்சி திரைப்படம் ஒரு வழியாக வெளியீட்டிற்கு தயாராவதை அறிந்த அஜித்தின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். டீசர் வெளியான சில மணி நேரத்திலேயே பல லட்சம் வ்யூஸ்களை பெற்று ட்ரெண்ட் ஆகி வருகிறது. டீசரில் அர்ஜுன், அஜித், திரிஷா மற்றும் ரெஜினா காட்சிகளே அதிகம் இடப்பிடித்துள்ளன.
Twitter Post
விடாமுயற்சி டீசர் பற்றி சில தகவல்கள்
'விடாமுயற்சி' டீசரின்படி, இது முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என தெரியவருகிறது. கடத்தல், மோதல் என மகிழ் திருமேனி ஸ்டைலில் படம் உருவாகியுள்ளது. இப்படம், 'பிரேக்டவுன்' என்ற ஹாலிவுட் படத்தை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது எனவும் பேச்சுகள் உள்ளது. "எல்லோரும் எல்லாம் கைவிடும் போது உன்னை நம்பு" என்ற வாக்கியத்துடன், டீசர் ஹாலிவுட் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது. டீசரில் கவனத்தை ஈர்க்கும் மற்றுமொரு விஷயம் அனிருத்தின் இசை. அஸர்பைஜானின் பாலைவன அழகையும், திரில்லர் படத்தின் அனுபவத்தையும் ஒருசேர தந்துள்ளார் என உறுதியுடன் கூறலாம். இந்த படத்தின் வெளியீட்டு தேதி உறுதிப்படவில்லை என்றாலும், 2025 பொங்கலுக்கு, விக்ரமின் 'வீர தீர சூரன்', ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' படங்களுடன் களத்தில் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.