மாதவன் வீட்டு தீபாவளி கொண்டாட்டத்தில் நடிகர் அஜித்தா? வைரலாகும் இன்ஸ்டா பதிவு
செய்தி முன்னோட்டம்
நடிகர் மாதவனும், அவரது மனைவி சரிதாவும் சமீபத்தில் துபாய் உள்ள அவர்களது வீட்டில் தீபாவளி கொண்டாட்டத்தை நடத்தினர்.
அந்த விழாவில், அவர்களது குடும்பத்திற்கு நெருக்கமானவர்களை அழைத்து விருந்து வைத்திருந்த வீடியோவினை மாதவனின் மனைவி சரிதா தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
யாரும் எதிர்பாராத வகையில் அந்த விருந்தில், நடிகர் அஜித்குமாரும் கலந்து கொண்டுள்ளார்.
அவர்கள் மற்ற நண்பர்களுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
தெரியாதவர்களுக்கு, அஜித், ஷாலினி மற்றும் மாதவன் பல ஆண்டுகளாக நல்ல நண்பர்களாக உள்ளனர்.
சமீபத்தில் ஷாலினியும் மாதவனுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, 'என்றென்றும் புன்னகை' என பதிவிட்டிருந்தார்.
நடிகர் அஜித் தற்போது கார் ரேஸ் பந்தையத்திற்காக துபாயில் முகாமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Two heartthrobs in a single frame ♥️#AjithKumar #Madhavan #Thala #VidaaMuyarchi pic.twitter.com/jNLMMhKm48
— Sarvajit Krishna Mohan (@SarvajitKM) November 4, 2024