LOADING...
தமிழ் திரையுலகில் இதுவரை பத்ம விபூஷண் விருது பெற்ற மற்ற நடிகர்கள் இவர்கள் தான்!
பத்ம விபூஷண் விருது பெரும் 5வது நடிகர் அஜித் குமார்

தமிழ் திரையுலகில் இதுவரை பத்ம விபூஷண் விருது பெற்ற மற்ற நடிகர்கள் இவர்கள் தான்!

எழுதியவர் Venkatalakshmi V
Jan 26, 2025
07:25 am

செய்தி முன்னோட்டம்

76வது குடியரசு தினத்தை முன்னிட்டு, மத்திய அரசு பத்ம விருது வென்றவர்களின் பட்டியலை அறிவித்துள்ளது. அதில், நடிகர்கள் அஜித் குமார், நந்தமுரி பாலகிருஷ்ணா, அனந்த் நாக், திரைப்பட தயாரிப்பாளர் சேகர் கபூர் மற்றும் பலர் கௌரவிக்கப்பட்டனர். நடிகை-நடனக் கலைஞர் ஷோபனா சந்திரகுமாருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. தமிழ் சினிமாவை பொறுத்த வரை பத்ம விபூஷண் விருது பெரும் 5வது நடிகர் அஜித் குமார் ஆகிறார். இதற்கு முன்னர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் (1984), சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் (2000), கமல்ஹாசன் (2014), கேப்டன் விஜயகாந்த் (2024) ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

பெருமை

நடிகர் அஜித்திற்கு இந்த வருடம் தொடர்ந்து பெருமைகள்

இதற்கிடையே பல தடங்கல்களை தாண்டி நடிகர் அஜித் குமார் இயக்குனர் மகிழ் திருமேனியின் விடாமுயற்சி திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராகி உள்ளது. இது பிப்ரவரி 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அதை தொடர்ந்து, அவரது அடுத்த வெளியீடு இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனின் குட் பேட் அக்லி ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகிறது. மறுபுறம், அவரது பந்தய அணி (அஜித் குமார் ரேசிங் டீம்) துபாய் 24H பந்தய நிகழ்வில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. இதன்மூலம் திரைத்துறையில் ரேசிங்கில் சாதித்த முதல் நடிகர் ஆகிறார் அஜித். இதோடு, சில வாரங்களில் போர்ச்சுகலில் நடைபெறும் ஒரு சர்வதேச பந்தய நிகழ்வில் அவர் பங்கேற்கவுள்ளார்.