Page Loader
பத்ம விருதுகள் அறிவிப்பு: நடிகர் அஜித்திற்கு பத்ம பூஷன் விருது அறிவிப்பு; விருது பெறும் மற்றவர்கள் விவரங்கள்
நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது அறிவிப்பு!

பத்ம விருதுகள் அறிவிப்பு: நடிகர் அஜித்திற்கு பத்ம பூஷன் விருது அறிவிப்பு; விருது பெறும் மற்றவர்கள் விவரங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 25, 2025
09:53 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் அஜித்குமார், நாட்டுப்புற பாடகி சாரதா சின்ஹா, மலையாள எழுத்தாளரும் இயக்குனருமான எம்.டி.வாசுதேவன் நாயர், ஹாக்கி வீரர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ் உள்ளிட்ட 139 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுவதாக 76வது குடியரசு தினத்தைகுடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. 139 பத்ம விருதுகளில், ஏழு பேர் இந்தியாவின் உயரிய சிவிலியன் விருதான பத்ம விபூஷனையும், 19 பேருக்கு பத்ம பூஷன் மற்றும் 113 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட உள்ளது. பீகார் முன்னாள் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி, சுஸுகி மோட்டார் கார்ப்பரேஷனின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசுகி, கிரிக்கெட் வீரர் ஆர் அஸ்வின் ரவிச்சந்தர் மற்றும் பாடகர் அரிஜித் சிங் ஆகியோர் பத்ம விருதுகளை பெறவுள்ள குறிப்பிடத்தக்க நபர்களில் சிலர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

தமிழக சாதனையாளர்கள்

பத்ம விருதுகள் பெறும் தமிழகத்தை சேர்ந்த சாதனையாளர்கள் விவரம் 

இந்தாண்டு தமிழகத்தை சேர்ந்த 13 பேருக்கு பத்ம விருதுகள் வழக்கப்பட்டுள்ளன. தொழில் துறையில் பங்காற்றிய நல்லி குப்புசாமிக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கலைப் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது, விளையாட்டு பிரிவில் கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், தமிழகத்தைச் சேர்ந்த வேலு ஆசான் (கலை), குருவாயூர் துரை (கலை), செஃப் தாமு (சமையற்கலை), தினமலர் இணையாசிரியர் லட்சுமிபதி ராமசுப்பையர் (இலக்கியம் - கல்வி - இதழியல்), எம்.டி.ஸ்ரீனிவாஸ் (அறிவியல் - கட்டிடக் கலை), புரசை கண்ணப்ப சம்பந்தன் (கலை), ராதாகிருஷ்ணன் தேவசேனாதிபதி (கலை), ஸ்ரீனி விஸ்வநாதன் (இலக்கியம் - கல்வி) மற்றும் ஷோபானா சந்திரகுமார் ஆகியோருக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

பத்ம விருது வழங்கியமைக்கு நன்றி கூறிய அஜித்

விருது வழங்கி கௌரவப்படுத்தியதற்கு நடிகர் அஜித் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,"இந்திய ஜனாதிபதியிடமிருந்து மதிப்புமிக்க பத்ம விருதைப் பெறுவதில் நான் மிகவும் பணிவாகவும் பெருமையாகவும் இருக்கிறேன். இந்த மதிப்புமிக்க கௌரவத்திற்காக இந்திய ஜனாதிபதி திருமதி திரௌபதி முர்மு மற்றும் மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்றார். "அதே நேரத்தில், இந்த அங்கீகாரம் ஒரு தனிப்பட்ட பாராட்டு மட்டுமல்ல, பலரின் கூட்டு முயற்சிகள் மற்றும் ஆதரவிற்கான சான்றாகும் என்பதை நான் நினைவில் கொள்கிறேன். எனது புகழ்பெற்ற மூத்தவர்கள், பல்வேறு சகாக்கள் மற்றும் சொல்லப்படாத பலர் உட்பட திரைப்படத் துறை உறுப்பினர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்றும் அவரது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post