
சீனா பரஸ்பர நடவடிக்கையை ரத்து செய்யவில்லையென்றால் மேலும் 50% வரி: மிரட்டும் டிரம்ப்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கட்கிழமை, சீனாவுக்கு எதிராக 50% கூடுதல் வரி விதிக்கப் போவதாக மிரட்டினார்.
இது சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 34% வரிக்கும் கூடுதலாக விதிக்கப்படும் வரியாகும்.
இதற்கு பதிலளிக்க, சீனா இந்த கட்டண அச்சுறுத்தலுக்கு பயப்படமாட்டோம் என்றும், அமெரிக்கா ஆதாரமற்ற காரணங்களுக்காக வரிகளை விதித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
முன்னதாக டிரம்ப், சீனாவுக்கு ஒருநாள் காலக்கெடு வழங்கி, அது அறிவித்த 34% பரஸ்பர வரி அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் எனகூறியிருந்தார்.
சீனா காலக்கெடுவிற்குள் அதை செய்யாவிட்டால், ஏப்ரல் 9 முதல் சீனா பொருட்களுக்கு கூடுதலாக 50% வரி விதிக்கப்படும் என எச்சரித்தார்.
பங்குச் சந்தை
உலகளாவிய பங்குச் சந்தை பாதிப்பு
டிரம்பின் கட்டண அறிவிப்புகளைத் தொடர்ந்து உலகளாவிய பங்குச் சந்தைகள் கடுமையாக சரிந்தன.
சீனாவுக்கு எதிராக கூடுதல் வரி விதிப்பதைத் தொடர்ந்து அமெரிக்காவின் S&P 500 20% வீழ்ச்சி கண்டுள்ளது, டவ் ஜோன்ஸ் 17% குறைந்துள்ளது, மேலும் NASDAQ ஏற்கனவே பாதாள நிலைக்கு நெருங்கியுள்ளது.
சீனாவின் ஹேங் செங் தொழில்நுட்ப குறியீடும் 27% வீழ்ச்சியடைந்துள்ளது.
எதிர்வினை
சீனாவின் எதிர்வினை
சீனா, அமெரிக்க அரசின் நடவடிக்கையை "அதிகார துஷ்பிரயோகம்" மற்றும் "பரஸ்பர நடவடிக்கை" எனக் குற்றம்சாட்டியது.
சீன அரசின் ஊடகமான குளோபல் டைம்ஸ், அமெரிக்காவின் நடவடிக்கை சர்வதேச வர்த்தக விதிகளை மீறுவதாகவும், உலகளாவிய பொருளாதார ஸ்திரத்தன்மையை பாதிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
சீனா உறுதியான எதிர்வினை வழங்கி, தனது இறையாண்மையைப் பாதுகாக்கும் முயற்சியில் உறுதியாய் உள்ளது.
ஏப்ரல் 4 முதல், சீனா அரிய பூமி தாதுக்கள் (Gadolinium, Terbium, Dysprosium, Lutetium, Scandium, Yttrium) மீது ஏற்றுமதி கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது.
அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர் உலக பொருளாதாரத்திற்கு பெரும் தாக்கங்களை ஏற்படுத்துகிறது. உலகளாவிய சந்தைகள் தீவிரமான நிலைமையை எதிர்கொள்கின்றன, மேலும் இரு நாடுகளுக்கிடையேயான அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலை எதிர்காலத்தில் மேலும் தீவிரமடையக்கூடும்.