NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / அமெரிக்காவில் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்பவருக்கு உடனடி பெர்மிட்: டிரம்ப் உறுதி
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமெரிக்காவில் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்பவருக்கு உடனடி பெர்மிட்: டிரம்ப் உறுதி

    அமெரிக்காவில் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்பவருக்கு உடனடி பெர்மிட்: டிரம்ப் உறுதி

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 11, 2024
    09:42 am

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் 1 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி உட்பட "முழுமையான அனுமதிகளை" வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

    விரைவான அனுமதிகளுக்கு யார் தகுதி பெறுவார்கள் என்பதை அவர் குறிப்பிடவில்லை என்றாலும், இயற்கை எரிவாயு குழாய்கள், ஏற்றுமதி முனையங்கள், சூரியஒளி பண்ணைகள் மற்றும் கடல் காற்றாலைகள் உள்ளிட்ட ஆற்றல் திட்டங்கள் பில்லியன் டாலர் அளவுகோல்களை சந்திக்கின்றன.

    செவ்வாயன்று தனது Truth Social செயலியில் ஒரு இடுகையில், டிரம்ப் இதனைத்தெரிவித்தார்.

    நடைமுறை

    தற்போதுள்ள நடைமுறைப்படி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் உள்ளது

    அமெரிக்க தேசிய சுற்றுச்சூழல் கொள்கைச் சட்டத்தின் (NEPA) படி, எந்தவொரு எரிசக்தி அல்லது பைப்லைன்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் போன்ற உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு முன், அரசு நிறுவனங்கள் சுற்றுச்சூழல் விளைவுகளை மதிப்பிட வேண்டும்.

    இத்தகைய மதிப்பீடுகள் தொடர்பான தாமதங்கள் குறித்து நீண்டகாலமாக புகார் தெரிவித்து வரும் நிறுவனங்களுக்கு டிரம்பின் அறிவிப்பு வரப்பிரசாதமாக அமையும்.

    விமர்சனங்கள்

    ட்ரம்பின் அறிவிப்பிற்கு வெளியான விமர்சனங்கள் 

    சமீபத்திய காலங்களில் அமெரிக்காவில் சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறியதாக EV நிறுவனமான டெஸ்லா குற்றம் சாட்டப்பட்ட தொழில்நுட்ப கோடீஸ்வரர் எலான் மஸ்க், டிரம்பின் அறிவிப்பை பாராட்டினார்.

    எனினும், அமெரிக்க சுற்றுச்சூழல் அமைப்புகள், ட்ரம்பின் முடிவை கடுமையாக சாடியுள்ளன. இது NEPA ஐ மீறியது மற்றும் சட்டவிரோதமானது என்று கூறியது.

    சுற்றுச்சூழல் குழுவான எவர்கிரீன் ஆக்ஷன், "இந்த நாட்டில் அனுமதி வழங்குவதை நாங்கள் கவனிக்க வேண்டும். ஒப்புதல் செயல்முறையை மோசடி செய்வதால் பணக்கார நிறுவனங்கள் மட்டுமே பயனடைகின்றன, இல்லையா?" எனக்கேள்வி எழுப்பியுள்ளது.

    "அமெரிக்காவை அதிக கார்ப்பரேட் ஏலதாரர்களுக்கு விற்க ட்ரம்ப் கூச்சமின்றி, உண்மையில் முன்வருகிறார்" என்று எவர்கிரீன் ஆக்ஷனின் நிர்வாக இயக்குனர் லீனா மோஃபிட் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    டொனால்ட் டிரம்ப்
    முதலீடு

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    அமெரிக்கா

    டிரான்ஸ்மிஷன் பிரச்சனையால் 4.61 லட்சம் வாகனங்களை திரும்பப் பெறுகிறது ஜெனரல் மோட்டார்ஸ் ஜெனரல் மோட்டார்ஸ்
    ஏலியன்களை கண்டறிய புதிய கண்காணிப்பு அமைப்பு தொடக்கம்; அமெரிக்கா முடிவு உலக செய்திகள்
    27 வயது பெண்ணுக்கு வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் பொறுப்பு; டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு வெள்ளை மாளிகை
    10 மில்லியன் டாலர் மதிப்பிலான பழங்கால தொல்பொருட்களை இந்தியாவிடம் ஒப்படைத்தது அமெரிக்கா இந்தியா

    டொனால்ட் டிரம்ப்

    டிரம்பின் வெற்றி H-1B விசாவை மாற்றியமைக்க வழிவகுக்கும்: அறிக்கை விசா
    அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2024: வாக்குப்பதிவு துவங்கியது அமெரிக்கா
    அமெரிக்க தேர்தல் முடிவுகள்: அடுத்த அதிபர் யார் என்று எப்போது தெரியும்? அமெரிக்கா
    அமெரிக்க அதிபர் தேர்தல் 2024: முன்னிலையில் டிரம்ப்; கமலாவின் நிலை என்ன? அமெரிக்கா

    முதலீடு

    கிளாஸிக் லெஜன்ட்ஸ் நிறுவனத்தில் ரூ.525 கோடி முதலீடு செய்யும் மஹிந்திரா மஹிந்திரா
    2023ல் தமிழக அரசு அறிமுகப்படுத்திய மாஸ் திட்டங்கள் என்னென்ன? - பார்ப்போம் வாருங்கள்  மு.க ஸ்டாலின்
    2023-ல் நிஃப்டி 50 முதலீட்டு பெருக்கத்தை எட்டாத தங்க முதலீடு  தங்கம் வெள்ளி விலை
    2023ம் ஆண்டில் தமிழ்நாட்டில் மலர்ந்த புதிய உதயங்கள் - ஓர் செய்தி குறிப்பு ! மு.க ஸ்டாலின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025