LOADING...
இந்திய பங்குச்சந்தையில் ராக்கெட் வேக உயர்வு! சென்செக்ஸ் 750 புள்ளிகளுக்கு மேல் பாய்ச்சல்
சென்செக்ஸ் 750 புள்ளிகளுக்கு மேல் பாய்ச்சல்

இந்திய பங்குச்சந்தையில் ராக்கெட் வேக உயர்வு! சென்செக்ஸ் 750 புள்ளிகளுக்கு மேல் பாய்ச்சல்

எழுதியவர் Venkatalakshmi V
May 25, 2026
10:26 am

செய்தி முன்னோட்டம்

இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று (மே 25) வர்த்தக துவக்கத்திலேயே முதலீட்டாளர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியளிக்கும் வகையில் ராக்கெட் வேக உயர்வைச் சந்தித்துள்ளது. உலகளாவிய சாதகமான சூழல் மற்றும் உள்நாட்டுச் சந்தையின் பலம் காரணமாக சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய இரண்டு முக்கியக் குறியீடுகளும் பலத்த ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன. காலை 9:40 மணி நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 759.54 புள்ளிகள் உயர்ந்து 76,176.21 என்ற புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 217 புள்ளிகள் அதிகரித்து 23,934.76 என்ற அளவிலும் வலுவான நிலையில் வர்த்தகமாகின.

பங்குகள்

வங்கிகள் மற்றும் ஆட்டோ பங்குகள் வேட்டை

இன்றைய சந்தை உயர்வுக்கு முன்னணி வங்கி மற்றும் நிதித்துறை சார்ந்த பங்குகளின் அதிரடி வாங்குதலே முக்கியக் காரணமாக அமைந்தது. HDFC Bank: 2.07% உயர்வு Kotak Mahindra Bank: 1.97% உயர்வு Bajaj Finserv: 1.33% உயர்வு ICICI Bank: 1.26% உயர்வு மறுபுறம், கச்சா எண்ணெய் விலை சரிந்ததால் ஆட்டோமொபைல் துறையைச் சேர்ந்த பங்குகளும் நல்ல லாபத்தைப் பதிவு செய்தன. குறிப்பாக, மஹிந்திரா & மஹிந்திரா (M&M) நிறுவனம் 2.79% உயர்ந்து சென்செக்ஸ் பட்டியலில் முதலிடம் பிடித்தது. மாருதி சுசுகி நிறுவனப் பங்குகளும் 1.86% வரை உயர்ந்தன.

காரணங்கள்

இன்றைய சந்தை உயர்வுக்குப் பின்னணியில் உள்ள முக்கிய காரணங்கள்

1. அதிபர் டொனால்ட் டிரம்ப் 'ஒப்பந்தம் ஓரளவிற்குப் பேசப்பட்டுவிட்டது' எனக் கூறியதை அடுத்து தணியத் தொடங்கியுள்ளது. இது உலகளாவிய முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. 2. அமைதிப் பேச்சுவார்த்தை எதிரொலியாக பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 4.6% சரிந்து, ஒரு பேரல் 98.8 டாலராகக் குறைந்துள்ளது. 3. கடந்த வெள்ளிக்கிழமை RBI ₹2.87 லட்சம் கோடி உபரி நிதியை மத்திய அரசுக்கு டிவிடெண்டாக வழங்க ஒப்புதல் அளித்தது. இது அரசாங்கத்தின் நிதிநிலையை வலுப்படுத்தி, சந்தைக்குப் பெரும் ஊக்கத்தை அளித்துள்ளது. 4. இந்திய ரூபாயின் மதிப்பு 40 பைசாக்கள் உயர்ந்து 95.20 என்ற வலுவான நிலையை எட்டியது 5. India VIX குறியீடு 6.29% சரிந்து 16.78 என்ற நிலைக்கு வந்துள்ளது.

Advertisement