NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / விரைவில் அமெரிக்காவை விஞ்சும் தரத்தில் இந்தியாவின் சாலை உள்கட்டமைப்பு; அமைச்சர் நிதின் கட்கரி உறுதி
    அடுத்த செய்திக் கட்டுரை
    விரைவில் அமெரிக்காவை விஞ்சும் தரத்தில் இந்தியாவின் சாலை உள்கட்டமைப்பு; அமைச்சர் நிதின் கட்கரி உறுதி
    விரைவில் அமெரிக்காவை விஞ்சும் தரத்தில் இந்தியாவின் சாலை உள்கட்டமைப்பு

    விரைவில் அமெரிக்காவை விஞ்சும் தரத்தில் இந்தியாவின் சாலை உள்கட்டமைப்பு; அமைச்சர் நிதின் கட்கரி உறுதி

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 20, 2024
    09:38 am

    செய்தி முன்னோட்டம்

    மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், இந்தியாவின் சாலை கட்டமைப்பு விரைவில் அமெரிக்காவை விஞ்சும் என்று தெரிவித்துள்ளார்.

    மத்திய பிரதேசத்தின் போபாலில் நடந்த சாலை மற்றும் பாலம் கட்டுமானம் குறித்த கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் நிதின் கட்கரி, தளவாடச் செலவுகளைக் குறைப்பதற்கும் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும் நெடுஞ்சாலைகள், நீர்வழிகள் மற்றும் ரயில்வேயை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

    சாலைகளுக்கான விரிவான திட்ட அறிக்கைகளின் (டிபிஆர்) தரத்தை விமர்சித்த அவர், அவை பெரும்பாலும் சரியான ஆன்-சைட் மதிப்பீடுகள் இல்லாமல் தயாரிக்கப்படுகின்றன என்று கூறினார்.

    திறமையான போக்குவரத்து நெட்வொர்க்குகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த கட்கரி, சீனாவின் 8% உடன் ஒப்பிடும்போது இந்தியாவின் தளவாடச் செலவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14% ஆக இருப்பதாக தெரிவித்தார்.

    சாலை நெட்வொர்க்

    உலகின் இரண்டாவது பெரிய சாலை நெட்வொர்க்

    ஏற்றுமதியை அதிகரிக்கவும் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் இந்த செலவைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

    63 லட்சம் கிலோமீட்டர் சாலைகளைக் கொண்ட இந்தியா உலகின் இரண்டாவது பெரிய சாலை நெட்வொர்க்கைக் கொண்டுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

    பள்ளங்கள் மற்றும் தண்ணீர் சேதம் காரணமாக சாலைகள் அடிக்கடி பழுதுபார்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகக் கூறிய நிதின் கட்கரி, பராமரிப்பு செலவைக் குறைக்க கான்கிரீட் சாலைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    கட்கரி, உயிரி எரிபொருளை ஏற்றுக்கொள்ளவும், சாலை அமைப்பில் பிரிக்கப்பட்ட கழிவுகளை பயன்படுத்தவும் அழைப்பு விடுத்தார்.

    உயிரி எரிபொருள்

    விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் உயிரி எரிபொருள்

    விவசாய கழிவுகளை உயிரி எரிபொருளாக மாற்றும் திறனையும் அவர் வலியுறுத்தினார். இது விவசாயிகளுக்கு பயனளிக்கும் மற்றும் புதைபடிவ எரிபொருள் இறக்குமதியை குறைக்கும் என்று கூறினார்.

    இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான சாலை இறப்புகள் குறித்து கவலை தெரிவித்த கட்கரி, மேம்படுத்தப்பட்ட சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் விபத்து ஏற்படும் பகுதிகளுக்கு சிறந்த சாலை பொறியியல் ஆகியவற்றை வலியுறுத்தினார்.

    நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கணிசமான இழப்பை ஏற்படுத்தும் சாலை விபத்துகளைக் குறைப்பதில் சமூகப் பொறுப்பின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

    இந்த நிகழ்ச்சியில் மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், மாநில தலைமைச் செயலாளர் அனுராக் ஜெயின் மற்றும் பிற அதிகாரிகள் கலந்து கொண்டு, இந்தியாவின் எதிர்கால உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான கட்கரியின் தொலைநோக்குப் பார்வையை ஆதரித்தனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    நிதின் கட்காரி
    நிதின் கட்கரி
    போக்குவரத்து

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    இந்தியா

    Mozilla Firefox பிரவுசர் பயன்படுத்துறீங்களா? எச்சரிக்கையாக இருந்துக்கோங்க ஹேக்கிங்
    இந்தியாவின் 14வது மகாரத்னா நிறுவனமாக மாறியது ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்; மத்திய அரசு ஒப்புதல் வணிக செய்தி
    மருத்துவர்களின் ராஜினாமா சட்டப்படி செல்லாது; மேற்குவங்க அரசு விளக்கம் மேற்கு வங்காளம்
    2024 ஆம் ஆண்டில் அதிக வருமானம் ஈட்டிய இந்தியர்களில் கௌதம் அதானி முதலிடம்; ஃபோர்ப்ஸ் பட்டியல் வெளியீடு அதானி

    நிதின் கட்காரி

    9 லட்சம் வாகனங்களுக்கு ஏப்ரல் 1 முதல் தடை - நிதின் கட்கரி அறிவிப்பு சுற்றுச்சூழல்
    ஆறு வழி சாலை அமைப்பது குறித்து மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்
    உலகின் முதல் மூங்கில் விபத்து தடுப்பு மஹாராஷ்டிராவில் நிறுவப்பட்டுள்ளது: நிதின் கட்கரி மகாராஷ்டிரா
    சென்னை கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணி - ரூ.24 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு சென்னை

    நிதின் கட்கரி

    நாளை அறிமுகமாகிறது இந்தியாவிற்கான வாகன தர நிர்ணயத் திட்டமான 'பாரத் NCAP' இந்தியா
    டீசல் வாகனங்களுக்கு 10% கூடுதல் வரி? விளக்கமளித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி! ஆட்டோமொபைல்
    கார்களில் ஆறு ஏர்பேக்குகள் கட்டாயமில்லையா? என்ன கூறினார் நிதின் கட்கரி? ஆட்டோமொபைல்
    தானியங்கி கார்களுக்கு எதிரான கருத்தைத் தெரிவித்த நிதின் கட்கரி டெஸ்லா

    போக்குவரத்து

    போக்குவரத்து ஊழியர்கள் ஸ்ட்ரைக்: நாளை பேருந்துகள் இயங்கும் என அமைச்சர் உறுதி வேலைநிறுத்தம்
    பஸ் ஸ்ட்ரைக்: மதுரை தவிர மற்ற ஊர்களில் பேருந்துகள் வழக்கம்போல இயக்கம் வேலைநிறுத்தம்
    பஸ் ஸ்ட்ரைக்: பணிக்கு வராமல் வேலைநிறுத்தத்தில் பங்கெடுத்துள்ள ஊழியர்களுக்கு மெமோ வேலைநிறுத்தம்
    போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ் வேலைநிறுத்தம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025