Page Loader
மாநிலங்களுக்கான வளர்ச்சி நிதியை வெளியிட்டது மத்திய அரசு: தமிழகத்திற்கு ரூ.7,057.89 கோடி விடுவிப்பு
மாநிலங்களுக்கான வளர்ச்சி நிதியை வெளியிட்டது மத்திய அரசு

மாநிலங்களுக்கான வளர்ச்சி நிதியை வெளியிட்டது மத்திய அரசு: தமிழகத்திற்கு ரூ.7,057.89 கோடி விடுவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Jan 10, 2025
03:56 pm

செய்தி முன்னோட்டம்

மாநிலங்களின் வளர்ச்சி மற்றும் நலன் சார்ந்த விஷயங்களுக்காக மத்திய அரசு ரூ.1,73,030 கோடியை விடுவித்து உள்ளது. இதில் குறிப்பாக தமிழகத்திற்கு ரூ.7,057 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. மாநிலங்களின் வளர்ச்சி செலவினங்களுக்காக, இம்மாதம் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், மாநிலங்களுக்கான வரிப் பகிர்வாக ரூ.1,73,030 கோடியை ஒதுக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.89,086 கோடி ஒதுக்கப்பட்டு இருந்தது. முதலீடுகளை அதிகரிக்க வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களுக்கு செலவு செய்யும் வகையில் இந்தாண்டு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தது. இதில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்திற்கு ரூ.31,089.84 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்திற்கு ரூ.7,057 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post