Page Loader
காசா பகுதி மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதலை அடுத்து ட்ரெண்ட் ஆகும் ''All Eyes on Rafah''

காசா பகுதி மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதலை அடுத்து ட்ரெண்ட் ஆகும் ''All Eyes on Rafah''

எழுதியவர் Sindhuja SM
May 29, 2024
11:18 am

செய்தி முன்னோட்டம்

தெற்கு காசா நகரத்தின் மீது இஸ்ரேல் ஒரு பெரிய தாக்குதலை நடத்தி வரும் நிலையில், அந்த நகரத்தில் வசிக்கும் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக பல லட்சம் பேர் சமூக வளைத்தளங்களில் குரல் கொடுத்துள்ளனர். நேற்று உலகம் முழுவதிலுமிருந்து பலர் ''All Eyes on Rafah'' என்ற வாசகத்தை சமூக ஊடங்களில் பதிவிட்டு பாலஸ்தீனியர்களுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். சமீபத்தில் தெற்கு காசா நகரத்தில் உள்ள ஒரு கூடார முகாமில் தங்கி இருந்த 45 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டனர். கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் இருந்து இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியத்திற்கும் இடையே நடந்து வரும் போரில் இதுவரை 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல் 

நடிகை சமந்தா, நடிகர் துல்கர் சல்மான் உள்ளிட்டோர் காசாவுக்கு ஆதரவு 

ஆனால், சமீபத்தில் 45 பாலஸ்தீனியர்களை கொன்ற இஸ்ரேல் தாக்குதல் தவறுதலாக நடந்துவிட்டது என்று இஸ்ரேல் பிரதமர் கூறியுள்ளார். இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் அமெரிக்கா, ரஃபாவில் இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல் இன்னும் முழு அளவிலான படையெடுப்பாக மாறவில்லை என்றும், அதனால் அமெரிக்கா கிழித்த "சிவப்பு கோடுகளை" இஸ்ரேல் தாண்டவில்லை என்றும் தெரிவித்துள்ளது. காசாவின் ரஃபாவில் நடந்து வரும் இனப்படுகொலையைக் குறிக்கும் வகையில் ''All Eyes on Rafah'' என்ற வாசகத்தை இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் ட்விட்டரில் வெளியிட்டிருந்தது. இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் நடிகை சமந்தா, நடிகர் துல்கர் சல்மான், வீராங்கனை சானியா மிர்சா போன்ற பிரபலங்கள் உட்பட 2.9 கோடி பேர் அந்த இடுகையை பகிந்துள்ளனர்.