ஜப்பானில் அரசியல் குழப்பம்; பிரதமர் பதவிக்கு மும்முனைப் போட்டி
செய்தி முன்னோட்டம்
வெள்ளியன்று (செப்டம்பர் 27) ஜப்பானின் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி தற்போதைய பிரதமர் ஃபியூமியோ கிஷிடாவுக்கு அடுத்தபடியாக ஒரு புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க உள்ளது.
முன்னதாக, கடந்த மாதம் பதிவு செய்யப்பட்ட குறைந்த ஒப்புதல் மதிப்பீடுகள் மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக கிஷிடா தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு லிபரல் டெமாக்ரடிக் கட்சி தள்ளப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் சர்வதேச பதட்டங்களை, குறிப்பாக சீனாவின் எழுச்சி மற்றும் அமெரிக்கத் தலைமையைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற நிலைகள் உள்ள இந்த நேரத்தில் ஜப்பானின் புதிய பிரதமருக்கு அதிக நெருக்கடி உள்ளது.
எனினும், இந்த பதவிக்கான போட்டியில் தற்போது ஒன்பது பேர் உள்ளதாகக் கூறப்படுகிறது.
போட்டியாளர்கள்
ஜப்பான் பிரதமர் பதவிக்கான முன்னணி போட்டியாளர்கள்
பிரதமர் பதவிக்கு கட்சிக்குள் ஒன்பது பேர் போட்டியிடுவதாகக் கூறப்பட்டாலும், முன்னணிப் போட்டியாளர்களாக பாதுகாப்பு ரீதியாக கடுமையான சித்தாந்தம் கொண்ட சனே தகைச்சி, முன்னாள் பிரதமர் ஷுனிஜிரோவின் மகன் ஷின்ஜிரோ கொய்சுமி மற்றும் மூத்த அரசியல்வாதி ஷிகெரு இஷிபா உள்ளனர்.
இதற்கிடையே, 1955இல் இருந்து ஆட்சியில் இருக்கும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி, கிஷிடாவின் வீழ்ச்சிக்கு காரணமான ஊழல்கள் காரணமாக பலத்த பொது அதிருப்தியை எதிர்கொள்கிறது.
இதனால் கட்சியின் புதிய தலைவர் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவது மற்றும் பணவீக்கம், ஊதியத் தேக்கம் மற்றும் பலவீனமான யென் உள்ளிட்ட ஜப்பானின் பொருளாதார சிக்கல்களை நிவர்த்தி செய்தால் மட்டுமே 2025 அக்டோபரில் நடக்க உள்ள தேர்தலில் ஆட்சியை தக்கவைக்க முடியும் என்ற நிர்பந்தத்தில் உள்ளது.