இந்திய-கனட பிரச்சனை: கனடாவுக்கு ஆதரவு தெரிவித்தது அமெரிக்கா மற்றும் பிரிட்டன்
செய்தி முன்னோட்டம்
சீக்கிய பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கு தொடர்பான பிரச்சனையால் கனட-இந்திய உறவுகள் சிதைந்துள்ள நிலையில், இந்தியாவில் பணிபுரிந்து வந்த 41 தூதர்களை கனடா திரும்பப் பெற்றுக்கொண்டது.
இந்நிலையில், இந்தியாவில் உள்ள கனட தூதர்களை இந்திய அரசாங்கம் இனி வெளியேற்ற கூடாது என்று அமெரிக்கா மற்றும் பிரிட்டன் வலியுறுத்தியுள்ளன.
கடந்த ஜூன் மாதம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் வைத்து, காலிஸ்தான் பயங்கரவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டார்.
இதனையடுத்து, அவரது கொலையில் இந்திய அரசாங்கத்திற்கு நேரடி தொடர்பு இருப்பதாக கனட அரசாங்கம் பெரும் குற்றசாட்டை முன்வைத்தது.
இதனால், இந்தியா-கனடா மோதல் சூடு பிடித்துள்ளது.
இந்த மோதலின் ஒரு பகுதியாக 41 கனட தூதர்களை இந்திய அரசாங்கம் இந்தியாவில் இருந்து வெளியேற்றயது.
ட்ஜ்வ்
'இந்தியா தனது கடமைகளை நிலைநிறுத்தும் என்று எதிர்பார்க்கிறோம்': அமெரிக்கா
இந்த சூழ்நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசியிருக்கும் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர், இந்தியாவில் இருந்து கனட தூதர்கள் வெளியேற்றப்பட்டது தங்களுக்கு கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
"கனட தூதர்களை வெளியேற்ற வேண்டாம் என்றும், நடந்து வரும் கனேடிய விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் இந்திய அரசை வலியுறுத்தியுள்ளோம்." என்றும் அமெரிக்கா ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.
"1961ஆம் ஆண்டு இராஜதந்திர உறவுகளுக்கான வியன்னா உடன்படிக்கையின் கீழ் இந்தியா தனது கடமைகளை நிலைநிறுத்தும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்." என்று மேலும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
பிரிட்டனும் இந்தியாவிடம் இதே விஷயங்களை வலியுறுத்தியுள்ளது.