Loading...
நவம்பர் 3 இடைத்தேர்தல் வரை ஈரான் மீது ராணுவ நடவடிக்கை இல்லை: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு
ஈரான் மீது எந்தவிதமான ராணுவ நடவடிக்கையையும் அமெரிக்கா மேற்கொள்ளாது என ட்ரம்ப் அறிவித்துள்ளார்

நவம்பர் 3 இடைத்தேர்தல் வரை ஈரான் மீது ராணுவ நடவடிக்கை இல்லை: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Oct 09, 2026
11:39 am

செய்தி முன்னோட்டம்

வரும் நவம்பர் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள அமெரிக்கஅமெரிக்க இடைத்தேர்தலுக்கு முன்பாக, ஈரான் மீது எந்தவிதமான ராணுவ நடவடிக்கையையும் அமெரிக்கா மேற்கொள்ளாது என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். டெக்சாஸ் மாகாணம் சான் ஆண்டோனியோவில் நடைபெற்ற குடியரசுக் கட்சி தேர்தல் பரப்புரையில் பேசிய அதிபர் ட்ரம்ப், சமூக வலைதளப் பதிவிலும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். "நவம்பர் 3 இடைத்தேர்தல் முடியும் வரை ஈரான் மீது அமெரிக்கா எந்தத் தாக்குதலையும் நடத்தாது" என்று குறிப்பிட்ட அவர், தேர்தலுக்குப் பிறகு கடந்த 7 மாதங்களாக நடைபெறும் போரில் தீவிர ராணுவ நடவடிக்கையை தொடங்குவது சாத்தியமான ஒரு தேர்வாகவே இருக்கும் என எச்சரித்துள்ளார்.

அமைதி ஒப்பந்தம்

முறிந்த தற்காலிக அமைதி ஒப்பந்தம்

கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே 60 நாள் போர்நிறுத்தம் மற்றும் நிரந்தர அமைதிக்கான தற்காலிக ஒப்பந்தம் கையெழுத்தானது.

இருப்பினும், ஹார்முஸ் நீரிணை பகுதி வான் மற்றும் கடல்வழி பாதைகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்ததால், சில வாரங்களிலேயே அந்த ஒப்பந்தம் முறிவடைந்தது.

தற்போது அமெரிக்காவின் எதிர்ப்பேச்சுவார்த்தை முன்மொழிவை ஈரான் பெற்றுள்ளதாகவும், அதற்கு இன்னும் சில நாட்களில் முறைப்படி பதிலளிக்கப்படும் என்றும் ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், அமெரிக்காவின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மறைமுகப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறார்.

மறுபுறம், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா தனது ராணுவப் பலத்தை அதிகரித்து வருகிறது.

ADVERTISEMENT