இந்தியர்கள், இந்தியா திரும்பாமலே H-1B விசாக்களை புதுப்பிக்க முடியும்
செய்தி முன்னோட்டம்
H-1B விசா வைத்திருப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேறாமல் தங்கள் ஆவணங்களை புதுப்பிக்க அனுமதிக்கும் புதுப்பித்தல் திட்டத்தை அமெரிக்கா நிறுவ உள்ளது என்று தலைநகர் டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
H-1B விசா வைத்திருப்பவர்களுக்கான அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட புதுப்பித்தல் திட்டம் இந்த ஆண்டு செயல்படுத்தப்பட வாய்ப்புள்ளது.
மேலும் தற்போது தங்கள் விசாக்களை புதுப்பித்து, மறுசீரமைப்பதற்காக வேண்டி இந்தியாவிற்கு திரும்ப வேண்டிய காட்டியதில் இருந்த IT ஊழியர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.
அமெரிக்காவில் H-1B விசாக்களை புதுப்பிப்பதற்கான ஒரு பைலட் திட்டத்தை வெற்றிகரமாக முடித்ததைத் தொடர்ந்து இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
விவாதம்
ஜனாதிபதி பைடன் வெள்ளை மாளிகை விட்டு வெளியேறும் முன்னர் வெளியாகும் அறிவிப்பு
H-1B விசாவைப் புதுப்பிப்பதற்கும் மறுசீரமைப்பதற்கும் இந்தியாவுக்குத் திரும்புவது என்பது அமெரிக்காவைச் சேர்ந்த இந்தியத் தொழிலாளர்களுக்கு நீண்டகால கவலையாக இருந்து வருகிறது.
அமெரிக்காவில் H-1B விசாக்கள் பற்றிய விவாதத்தின் மத்தியில் இந்த வளர்ச்சி வந்துள்ளது.
இந்திய தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் H-1B விசாக்கள் வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் அமெரிக்க வேலைகள் பற்றிய விவாதங்களில் ஒரு முக்கிய புள்ளியாக மாறியுள்ளது.
வரவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தீவிர ஆதரவாளர்கள், முதன்மையாக இந்தியாவைச் சேர்ந்த H-1B விசா வைத்திருப்பவர்கள், அமெரிக்க ஊழியர்களை மாற்றி மேற்கத்திய நாகரீகத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக வாதிடுகின்றனர்.
இருப்பினும் இந்தியர்களுக்கு ஆதரவாக சில மாற்றங்களை அறிவித்து வருகிறார் தற்போதைய அதிபர் பைடன்.
பைலட் திட்டம்
H-1B பைலட் திட்டம்
H-1B பைலட் திட்டம், H-1B விசா வைத்திருப்பவர்களுக்கான புதுப்பித்தல் செயல்முறையை நெறிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
அவர்கள் முன்பு, விசா புதுப்பிப்பிற்காக தங்கள் சொந்த நாட்டிற்குச் செல்ல வேண்டியிருந்தது.
இத்திட்டத்தின் வெற்றியானது 2025ஆம் ஆண்டில் அமெரிக்காவை தளமாகக் கொண்ட புதுப்பித்தல் திட்டத்தை முறையாக நிறுவுவதற்கு வெளியுறவுத்துறைக்கு வழி வகுத்துள்ளது.
H-1B விசா பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், இந்த வளர்ச்சி இந்தியத் தொழிலாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தொழில்நுட்பம், பொறியியல், மருத்துவம் மற்றும் நிதி போன்ற சிறப்புத் துறைகளில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு H-1B விசாக்கள் வழங்கப்படுகின்றன.