பணிநீக்கம் செய்யப்பட்ட H-1B தொழிலாளர்கள் அமெரிக்காவில் 60 நாட்களுக்கு மேல் தங்கலாம்
தங்களது வேலையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட H-1B விசா வைத்திருப்பவர்களுக்கு புதிய வழிகாட்டுதல்களை அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) அறிவித்துள்ளது. சமீபத்தில், கூகுள், டெஸ்லா மற்றும் வால்மார்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் பெரும் பணிநீக்கங்களை அறிவித்தன. இதனால், H-1B விசாவில் குடியேறிய பல தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பாதித்தது, அது போன்ற தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் ஒரு வழிகாட்டுதலை USCIS வெளியிட்டுள்ளது. பணிநீக்கம் செய்யப்பட்ட H-1B தொழிலாளர்கள் அமெரிக்காவில் 60 நாட்களுக்கு மேல் தங்கலாம் என்ற புதிய சலுகையும் இதில் அடங்கும்.
அது போக வேறு என்ன சலுகைகள் உள்ளன?
வேலை இழந்த தொழிலாளர்கள் குறிப்பிட்ட சலுகை காலம் முடிவடைவதற்குள் புலம்பெயர்ந்தோர் அல்லாதோர் நிலையை மாற்றி கொள்ளலாம். ஸ்டேட்டஸை மாற்றிக்கொள்ள விண்ணப்பிக்கலாம். தொழிலாளர்கள் ஒரு வருட வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணத்திற்கு(EAD) தகுதி பெறக்கூடிய நிர்பந்தமான சூழ்நிலைகளை தீர்மானிக்கும் விண்ணப்பத்தை பதிவு செய்யலாம். முதலாளியை மாற்றுவதற்கான 'நான்-பிரிவிலஸ்' மனுவின் பயனாளி ஆவதற்கு விண்ணப்பத்தை பதிவு செய்யலாம். கூடுதலாக, பெயர்வுத்திறன் என்ற முறை, தகுதியான H-1B குடியேறாதவர்கள் புதிய வேலை வாய்ப்புகளுக்கு சுமூகமாக மாறுவதற்கு உதவுகிறது.