Loading...
அமெரிக்க பாதுகாப்பு செயலர் பீட் ஹெக்செத் மீதான பதவி நீக்க தீர்மானம் முறியடிப்பு: பிரதிநிதிகள் அவையில் குடியரசுத் கட்சி வெற்றி
அமெரிக்க பாதுகாப்பு செயலர் பீட் ஹெக்செத் மீதான பதவி நீக்க தீர்மானம் முறியடிப்பு

அமெரிக்க பாதுகாப்பு செயலர் பீட் ஹெக்செத் மீதான பதவி நீக்க தீர்மானம் முறியடிப்பு: பிரதிநிதிகள் அவையில் குடியரசுத் கட்சி வெற்றி

எழுதியவர் Venkatalakshmi V
Nov 11, 2026
10:27 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் மீது கொண்டுவரப்பட்ட பதவி நீக்க தீர்மானத்தை, குடியரசு கட்சி பெரும்பான்மை வகிக்கும் அமெரிக்க பிரதிநிதிகள் அவை வெற்றிகரமாக முடக்கியுள்ளது. ஈரான் போர் மற்றும் ராணுவ நடவடிக்கைகளை தவறாக கையாண்டதாகக் கூறி அவர் மீது கொண்டுவரப்பட்ட 8 பதவி நீக்க பிரிவுகளையும், நீதித்துறை வழிகாட்டுதல் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பும் தீர்மானம் 211 - 204 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் இத்தீர்மானம் தற்காலிகமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் நீடிக்கும் மோதல்கள் மற்றும் போரின் செலவினங்கள் காரணமாக ஜனநாயகக் கட்சியினர் தொடர்ந்து பீட் ஹெக்செத் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

டிரம்ப் வரவேற்பு

"பதவி நீக்க தோற்றது"

இந்த வாக்கெடுப்பு வெற்றி குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில்,"பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் மீது ஜனநாயகக் கட்சியினர் கொண்டு வந்த பதவி நீக்க முயற்சி பரிதாபமாகத் தோற்றுவிட்டது!"

"தாமஸ் மாசி என்ற ஒரே ஒரு குடியரசுத் கட்சி உறுப்பினரைத் தவிர, மற்ற அனைத்துக் குடியரசுத் கட்சியினரும் பீட் ஹெக்செத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். பீட் ஹெக்செத் ஒரு சிறந்த அமெரிக்க தேசபக்தர். வெனிசுலா மற்றும் ஈரானில் அவரது தலைமையிலான ராணுவ நடவடிக்கைகள் மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளன" என பதிவிட்டுள்ளார்.

வாக்களிப்பு பின்னணி

உள்கட்சி எதிர்ப்பு & வாக்களிப்பு பின்னணி

இந்த தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்த ஒரே குடியரசு கட்சி உறுப்பினர் தாமஸ் மாசி மட்டுமே ஆவார்.

மேலும், வாஷிங்டனில் இல்லாத 11 ஜனநாயக கட்சி உறுப்பினர்களின் வருகையின்மையும் இத்தீர்மானத்தை அவையின் முழுமையான வாக்கெடுப்பிற்கு விடாமல் முடக்குவதற்குக் குடியரசு கட்சிக்கு சாதகமாக அமைந்தது.

ஈரானில் நடந்து வரும் போருக்கு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ள எதிர்ப்பை காரணம் காட்டி, இந்த தீர்மானத்திற்கு ஜனநாயகக் கட்சியினர் முழு ஆதரவு அளித்திருந்தனர்.

இத்தீர்மானம் வெற்றி பெற்றிருந்தால், அமெரிக்க வரலாற்றிலேயே பதவி நீக்கம் செய்யப்பட்ட முதல் பாதுகாப்புச் செயலர் என்ற நிலையை ஹெக்செத் அடைந்திருப்பார்.

இதற்கு முன் 1876-ஆம் ஆண்டு வில்லியம் பெல்க்னாப் என்ற போர்ச் செயலர் இத்தகைய நடவடிக்கையை எதிர்கொண்டார்.

ADVERTISEMENT