Page Loader
தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட 14 நாடுகளுக்கு வரிகளை உயர்த்துவதாக அறிவித்தது அமெரிக்கா
14 நாடுகளுக்கு வரிகளை உயர்த்துவதாக அறிவித்தது அமெரிக்கா

தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட 14 நாடுகளுக்கு வரிகளை உயர்த்துவதாக அறிவித்தது அமெரிக்கா

எழுதியவர் Venkatalakshmi V
Jul 08, 2025
08:12 am

செய்தி முன்னோட்டம்

ஜப்பான் மற்றும் தென் கொரியாவுக்கு 25% வரி விதிப்பை அறிவித்த சில மணி நேரங்களில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மேலும் 12 நாடுகளுக்கு கூடுதலாக வரி விதித்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவால் உயர்த்தப்பட்ட வரிவிதிப்பு பட்டியல் பின்வருமாறு: தென் கொரியா -25% ஜப்பான் - 25% மியான்மர் - 40% லாவோஸ் - 40% தென்னாப்பிரிக்கா - 30% கஜகஸ்தான் - 25% மலேசியா - 25% துனீசியா - 25% இந்தோனேசியா - 32% போஸ்னியா & ஹெர்சகோவினா - 30% பங்களாதேஷ் - 35% செர்பியா - 35% கம்போடியா - 36% தாய்லாந்து - 36% இந்த வரிவிதிப்புகள் குறித்து இந்த நாடுகளுக்கான அதிகாரபூர்வ கடிதங்களையும் ட்ரம்ப் அனுப்பியுள்ளார்.

பின்னணி

வரி விதிப்புகளுக்கான பின்னணி 

டொனால்ட் ட்ரம்ப் ஜனவரி 20, 2025 அன்று அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற பிறகு, பல நாடுகளுக்கு எதிரான வரிவிதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளார். ஏற்கனவே இந்திய பொருட்களுக்கு 26% வரி விதிக்கப்படும் என ஏப்ரல் 2-ம் தேதி பட்டியல் வெளியானது. எனினும், பேச்சுவார்த்தைக்கு முன்வந்த இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு 90 நாள் இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்ட நிலையில், இன்றுடன் (ஜூலை 9) தேதி நிறைவடைவதால் டிரம்ப்பின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை இறுதி நிலையில் இருப்பதாகவும் டிரம்ப் கூறினார்.