Page Loader
நிவாரண பொருட்களுடன் 20 லாரிகள் காசாவுக்குள் நுழைந்தன

நிவாரண பொருட்களுடன் 20 லாரிகள் காசாவுக்குள் நுழைந்தன

எழுதியவர் Srinath r
Oct 21, 2023
02:57 pm

செய்தி முன்னோட்டம்

பாலஸ்தீனிய மக்களுக்கு நிவாரண பொருட்களை ஏற்றிச்சென்ற 20 லாரிகள் எகிப்தின் 'ரஃபா எல்லை' வழியாக, காசாவுக்குள் நுழைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த அக்டோபர் 7ஆம் தேதி பாலஸ்தீன ஆயுத குழுவான ஹமாஸ், இஸ்ரேல் மீது திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தியதை அடுத்து இரு நாடுகளிடையே போர் மூண்டது. இதனையடுத்து, இஸ்ரேல், காசாவுக்கு குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் சேவையை துண்டித்தது. எகிப்தும், காசா உடனான ரஃபா எல்லை மூடியது. இரண்டு நாட்களுக்கு முன் இஸ்ரேல் சென்று இருந்த அமெரிக்க அதிபர் பைடன், காசாவுக்கு நிவாரண பொருட்களை அனுப்ப அனுமதிக்குமாறு எகிப்திடம் கேட்டுக்கொண்டார். அதன்படி இன்று, போர் மூண்டதற்கு பிறகு முதல்முறையாக, 20 லாரிகளில் நிவாரண பொருட்கள் காசாவுக்குள் சென்றது.

ட்விட்டர் அஞ்சல்

முதல்முறையாக நிவாரண பொருட்களை பெற இருக்கும் காசா மக்கள்