2024 முதல், சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்திற்கு பாஸ்போர்ட் தேவையில்லை
விரிவுபடுத்தப்பட்ட சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம், சுற்றுலாவாசிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது. புதிய தொழில்நுட்பங்கள், கண்கவரும் மின்விளக்குகள் என விமான நிலையமே ஒரு சொர்க்கமாக மாற்றியுள்ளது சிங்கப்பூர் அரசு. இந்த விமான நிலையத்தில் ஏற்கனவே பயோமெட்ரிக் தொழில்நுட்பம், முக அங்கீகார மென்பொருளுடன் கூடிய குடிவரவு சோதனைச்சாவடிகள், தானியங்கு பாதைகள் போன்றவை பயன்பாட்டில் உள்ளது. இதனால், அங்கே காத்திருப்பு நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு புதுமை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. வரும் 2024ஆம் ஆண்டு முதல், சாங்கி விமானநிலையத்தில் தானியங்கி குடியேற்ற அனுமதியுடன், பாஸ்போர்ட் இல்லாமல் பயணம் செய்ய அனுமதிக்கப்போகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த தானியங்கி சேவையை அனுமதிக்கும் நாட்டிற்கு மட்டுமே இது செல்லுபடியாகும், மற்ற நாடுகளுக்கு இன்னும் பாஸ்போர்ட் தேவைப்படும்.