வீடியோ: 5 நிமிடங்களில் 6,000 அடி சரிந்ததால் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான பயணிகள் மத்தியில் பதட்டம்
லண்டனில் இருந்து சிங்கப்பூருக்கு சென்று கொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் SIAL.SI விமானம் நடு வானில் ஆட்டம் கண்டதால் இன்று பாங்காக்கில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால், அதில் பயணித்த ஒருவர் உயிரிழந்தார் மற்றும் பலருக்கு காயங்கள் ஏற்பட்டது. 37,000 அடிக்கு மேல் பறந்து கொண்டிருந்த விமானம் 5 நிமிடத்தில் 6000 ஆதி சரிந்து 31,000 அடி கீழ் வந்தால் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் பதட்டம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தின் போது அதற்கு பின்பும் பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. FlightRadar 24 தரவுகளின்படி, அந்த விமானம் அந்தமான் கடலை கடந்து தாய்லாந்தை நெருங்கியதும் ஐந்து நிமிடங்களுக்குள் சுமார் 37,000 அடி உயரத்தில் இருந்து 31,000 அடிக்கு சரிந்தது.
211 பயணிகள் மற்றும் 18 பணியாளர்களுடன் சென்ற சிங்கப்பூர் விமானம்
அந்த விமானம் லண்டனில் இருந்து புறப்பட்டு சுமார் 11 மணி நேரம் கழித்து இந்த சம்பவம் நடந்திருக்கிறது. 211 பயணிகள் மற்றும் 18 பணியாளர்களுடன் சிங்கப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது போயிங் 777-300ER விமானம் என்று அந்த விமான நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. "சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் SQ321, 20 மே 2024 அன்று லண்டனிலிருந்து (ஹீத்ரோ) சிங்கப்பூருக்குச் சென்று கொண்டிருந்த போது, வழியில் கடுமையாக ஆட்டம் கண்டது. எனவே, அந்த விமானம் பாங்காக்கிற்குத் திருப்பிவிடப்பட்டு, 21 மே 2024 அன்று உள்ளூர் நேரப்படி 1545 மணிக்கு தரையிறங்கியது. காயம் அடைந்தவர்கள் இருக்கிறார்கள் என்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது" என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூறியுள்ளது.