மீண்டும் வேகமெடுக்கும் 15ஆம் நூற்றாண்டு கால நோய்; ஆய்வில் வெளியான தகவல்
15ஆம் நூற்றாண்டிலிருந்து மாலுமிகள் மற்றும் கடற்கொள்ளையர்களுடன் வரலாற்று ரீதியாக தொடர்புடைய ஸ்கர்வி நோய், ஆச்சரியப்படும் வகையில் இந்த 21ஆம் நூற்றாண்டில் மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. நீண்ட கடல் பயணங்களின் போது புதிய விளைபொருட்களை நீண்ட காலமாக எடுத்துக் கொள்ளாமல், மோசமான உணவுப் பழக்கவழக்கங்களால் ஏற்படும் ஸ்கர்வி நோய் இப்போது மீண்டும் தோன்றி வருவதாக பிரிட்டனின் மெட்ரோ என்ற ஊடகம் தெரிவித்துள்ளது. வைட்டமின் சி குறைபாட்டால் ஏற்படும் இந்நிலை, மூட்டு வலி, ஈறுகளில் இரத்தப்போக்கு, சோர்வு போன்ற அறிகுறிகளுடன் 2007 முதல் அதிகரித்து வருகிறது. ஒரு நடுத்தர வயது ஆண் மற்றும் 65 வயது பெண் உட்பட மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் கனடாவில் இருந்து சமீபத்திய பாதிப்புகள், இந்த நோயின் அதிகரிப்பை எடுத்துக்காட்டுகின்றன.
ஸ்கர்வி பாதிப்பு அதிகரிப்பதன் பின்னணி
மருத்துவ வல்லுநர்கள் மோசமான உணவுமுறைகள், குறிப்பாக சிட்ரஸ் போன்ற வைட்டமின் சி நிறைந்த உணவுகள் இல்லாததால் இந்த பாதிப்புகள் அதிகரிப்பதாகக் கூறுகின்றனர். ஸ்கர்வி தொடர்பாக மருத்துவமனையில் அனுமதிப்பதில் குறிப்பிடத்தக்க உயர்வை ஆய்வுகள் காட்டுகின்றன. 2010 மற்றும் 2018க்கு இடையில், என்எச்எஸ் தரவு 82 முதல் 167 சேர்க்கைகளை பதிவு செய்துள்ளது. 2009 மற்றும் 2014 க்கு இடையில் 27% உயர்ந்துள்ளது. அதேநேரம் 2018/19இல் 12 ஸ்கர்வி பாதிப்புகள் மட்டுமே பதிவாகியிருந்தாலும், மற்ற ஊட்டச்சத்து குறைபாடுகள் தொடர்பான 5,000 க்கும் மேற்பட்ட பதிவுகள் உள்ளன. அதிர்ஷ்டவசமாக, டயட் அல்லது சப்ளிமெண்ட்ஸ் மூலம் சரியான வைட்டமின் சி உட்கொள்வதன் மூலம் ஸ்கர்வி தடுக்கக்கூடியது மற்றும் சிகிச்சையளிக்கக்கூடியது.