உக்ரைன் போரில், உலகளாவிய இரசாயன ஆயுதங்கள் தடையை ரஷ்யா மீறியதா?
உக்ரேனிய துருப்புக்களுக்கு எதிராக மூச்சுத் திணறல் ஏற்படுத்தும் அபாயகரமான குளோரோபிரின் பயன்படுத்தியதன் மூலம், ரஷ்யா இரசாயன ஆயுதத் தடையை மீறியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. அதோடு, கலகக் கட்டுப்பாட்டு முகவர்கள் உக்ரைனில் "போர் முறையாக" பயன்படுத்தப்பட்டதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது. "இத்தகைய இரசாயனங்களின் பயன்பாடு ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் அல்ல. உக்ரேனியப் படைகளை வலுவூட்டப்பட்ட நிலைகளில் இருந்து வெளியேற்றவும், போர்க்களத்தில் தந்திரோபாய ஆதாயங்களை அடையவும் ரஷ்யா இதனை பயன்படுத்துகிறது" என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. வாஷிங்டனில் உள்ள ரஷ்ய தூதரகம் இந்த குற்றச்சாட்டுக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை.1993 இரசாயன ஆயுத மாநாட்டை (CWC) செயல்படுத்தவும், கண்காணிக்கவும் உருவாக்கப்பட்ட ஹேக்-அடிப்படையிலான இரசாயன ஆயுதங்களை தடை செய்வதற்கான அமைப்பால் (OPCW) குளோரோபிரின் தடைசெய்யப்பட்ட மூச்சுத்திணறல் ஆயுதமாக பட்டியலிடப்பட்டுள்ளது.
முதலாம் உலக போரிலே பயன்படுத்தப்பட்ட இரசாயன ஆயுதம்
முதலாம் உலகப் போரின் போது நேச நாட்டுப் படைகளுக்கு எதிராக ஜெர்மானியப் படைகள் இரசாயன ஆயுதத்தை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில், ராய்ட்டர்ஸ், உக்ரேனிய இராணுவம் , இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கிழக்கு உக்ரேனில், கலகக் கட்டுப்பாட்டு முகவர்களின் சட்டவிரோத பயன்பாட்டை ரஷ்யா முடுக்கிவிட்டதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. குளோரோபிரின் தவிர, ரஷ்யப் படைகள் சிஎஸ் மற்றும் சிஎன் வாயுக்கள் ஏற்றப்பட்ட கையெறி குண்டுகளைப் பயன்படுத்தியதாக உக்ரேனிய இராணுவம் கூறுகிறது. குறைந்தது 500 உக்ரேனிய வீரர்கள் இந்த வாயுக்களின் வீரியத்திற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும், ஒருவர் கண்ணீர்ப்புகைக் காற்றில் மூச்சுத் திணறி கொல்லப்பட்டதாகவும் கூறுகிறது.