Page Loader
அதிபர் ஜோ பைடனுடன் செய்தியாளர்களை சந்திக்க இருக்கிறார் பிரதமர் மோடி 
பிரதமர் மோடி 2014ஆம் ஆண்டில் பதவி ஏற்றதற்கு பிறகு கலந்து கொள்ளும் முதல் செய்தியாளர் சந்திப்பு இதுவாகும்.

அதிபர் ஜோ பைடனுடன் செய்தியாளர்களை சந்திக்க இருக்கிறார் பிரதமர் மோடி 

எழுதியவர் Sindhuja SM
Jun 22, 2023
11:40 am

செய்தி முன்னோட்டம்

பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் வியாழன் அன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொள்வார்கள் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. "தனது பயணத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்திக்க பிரதமர் மோடி ஒப்புக்கொண்டதற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். இது மிகவும் முக்கியமானது என்று நாங்கள் நினைக்கிறோம். அவரும் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது." என்று வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது, அமெரிக்க பத்திரிகை சார்பாக ஒரு கேள்வியும், இந்திய பத்திரிகையாளர்கள் சார்பாக ஒரு கேள்வியும் கேட்கப்பட உள்ளது. பிரதமர் மோடி 2014ஆம் ஆண்டில் பதவி ஏற்றதற்கு பிறகு கலந்து கொள்ளும் முதல் செய்தியாளர் சந்திப்பு இதுவாகும்.

கிடக்ஜ்ஸ்ட்

பிரதமர் மோடி இதுவரை எந்த செய்தியாளர் சந்திப்பிலும் கலந்து கொண்டதில்லை

அவ்வப்போது அரிதான சில பேட்டிகளுக்கு பதிலளித்ததை தவிர, பிரதமர் மோடி பதவியேற்றதற்கு பிறகு எந்த செய்தியாளர் சந்திப்பிலும் கலந்து கொண்டதில்லை. பொதுவாக, வெள்ளை மாளிகையில் நடைபெறும் செய்தியாளர் சந்திப்புகள் அதிக கட்டுப்பாடுகளுடனே நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. 3 நாட்கள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார். மேலும், அவருக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் வெள்ளை மாளிகையில் விருந்தளித்தனர். இதுதான் நட்பு நாடுகளுக்கு அமெரிக்கா வழங்கும் மிக உயர்ந்த வரவேற்பாகும். இந்த பயணம் வியாழக்கிழமை முடிவடைய உள்ள நிலையில், பிரதமர் மோடி தனது பயணத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்திக்க இருக்கிறார்.