
40 ஆண்டுகளுக்கு பின்னர் கிரீஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பிரதமர் மோடி
செய்தி முன்னோட்டம்
கடந்த 40 ஆண்டுகளில் கிரீஸ் நாட்டிற்கு சென்ற முதல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தான் என்று கூறப்படுகிறது.
தென்-ஆப்பரிக்காவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் பங்குகொள்ள பிரதமர் சென்றிருந்தார்.
அப்போது மோடிக்கு, கிரீஸ் நாட்டின் பிரதமர் கிரியோகோஸ் மிட்சோடோகிஸ் தங்கள் நாட்டிற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தார் என்று கூறப்படுகிறது.
அவரது அழைப்பினை ஏற்ற பிரதமர் மோடி, இன்று தென்-ஆப்பரிக்காவில் இருந்து கிரீஸ் நாட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது என்று செய்திகள் தெரிவிக்கிறது.
கடைசியாக 1983ம் ஆண்டு இந்திரா காந்தி பிரதமர் பதவியில் இருக்கையில் அங்கு சென்றுள்ளார்.
அதன் பின்னர் 40 வருடங்களுக்கு பின்னர் பிரதமர் மோடி தான் கிரீஸ் நாட்டிற்கு சென்றுள்ளார் என்று தெரிகிறது.
வரவேற்பு
இருநாடுகளுக்கு இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின
சீனாவின் ஆதிக்கத்தினை தாண்டி இந்திய பிரதமரின் இந்த பயணம், புவிசார் அரசியல் முக்கியத்துவத்தினை காட்டுகிறது.
அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தான், அர்ஜென்டீனா மற்றும் துருக்கி இடையே உள்ள கூட்டணியினை எதிர்கொள்ள வேண்டுமெனில் கிரீஸ் நாடுடனான உறவினை இந்தியா வளர்த்துக்கொள்வது அவசியம் என்றும் கூறப்படுகிறது.
கிரீஸ் நாட்டிற்கு சென்ற மோடி, அங்கு பேசுகையில், "1998ல் பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடந்ததற்கு அனைத்து நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கிரீஸ் மட்டும் தான் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்தது".
"அதேபோல் இந்தியா ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராகவும் கிரீஸ் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறது" என்று கூறியுள்ளார்.
மேலும் இருநாடுகளுக்கு இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் தற்போது கையெழுத்தாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.