பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்படுகிறதா?
அடுத்த மாதம் 12ஆம் தேதி தற்போதைய பாகிஸ்தான் அரசாங்கத்தின் ஆட்சி காலம் முடிவடையுள்ள நிலையில், ஆகஸ்ட் 8ஆம் தேதி ஆளும் கட்சி கூட்டணி கலைக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில், வரும் ஆகஸ்ட் மாதம் அரசாங்கத்தை "காப்பாளர் அமைப்பிடம்" ஒப்படைப்போம் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும் அறிவித்திருந்தார் என்பது குறிபிடத்தக்கது. PTI கட்சி தலைவர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசு 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி பதியேற்றது. ஆனால், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த ஏப்ரல் மாதம் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
அடுத்த மாத தொடக்கத்தில் பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்படும்
அவரை தொடர்ந்து, தற்போதைய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்றார். இந்நிலையில், அடுத்த மாதம் 12ஆம் தேதி இந்த ஆட்சியின் பதவிக்காலம் முடிவடைகிறது. பாகிஸ்தான் அரசியலமைப்பின் படி, ஆட்சிக்காலம் முடிவடைவதற்குள் ஆட்சி கலைக்கப்பட்டால், அதற்கு அடுத்த 60 நாட்களுக்குள் கண்டிப்பாக தேர்தலை நடத்த வேண்டும். இதனால், சீக்கிரமே ஆட்சியை கலைத்தால் அது தங்களுக்கு சாதகமாக முடியும் என்று பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் அரசாங்கம் கருதுகிறது. எனவே, அடுத்த மாத தொடக்கத்தில் பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முடிவுக்கு பாகிஸ்தானை ஆளும் கூட்டணி கட்சிகள் ஒப்புதல் அளித்திருந்தாலும், இதற்கான தேதி அதிகாரபூர்வமாக இன்னும் வெளியிடப்படவில்லை.