Page Loader
தனது பதவிக்காலத்தின் முடிவை அறிவித்தார் பாகிஸ்தான் பிரதமர் 
ஷெபாஸ் ஷெரீப் தனது அரசாங்கத்தின் பதிவிக்கால முடிவை அறிவித்துள்ளார்.

தனது பதவிக்காலத்தின் முடிவை அறிவித்தார் பாகிஸ்தான் பிரதமர் 

எழுதியவர் Sindhuja SM
Jul 14, 2023
06:26 pm

செய்தி முன்னோட்டம்

பாகிஸ்தான் சட்டசபையின் ஆட்சி காலம் முடிவடைய உள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் அரசாங்கத்தை "காப்பாளர் அமைப்பிடம்" ஒப்படைப்போம் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார். நேற்றும் இதே போன்ற ஒரு அறிவிப்பை வெளியிட்ட ஷெபாஸ் ஷெரீப், தனது அரசாங்கத்தின் பதவிக்காலம் ஆகஸ்ட் 14 ஆம் தேதியுடன் முடிவடையும் என்று கூறியுள்ளார். எனினும், ஆகஸ்ட் 12 ஆம் தேதி தேசிய சட்டமன்றத்தின்(NA) பதவிக்காலம் முடிவடைந்தவுடன், கூட்டணி கட்சிகள் சாதாரணமாக கலைக்கப்படுமா அல்லது அதற்கு முன்பே ஜனாதிபதி மூலம் ஆட்சி கலைக்கப்படுமா என்பதை ஷெபாஸ் ஷெரீப் தெளிவுபடுத்தவில்லை.

ஹவ்க்

அடுத்த தேர்தல் அக்டோபர் அல்லது நவம்பரில் நடைபெறும் 

பாகிஸ்தான் தேசிய சட்டமன்றத்தின்(NA) ஐந்தாண்டு பதவிக்காலம் அப்போதைய PTI அரசாங்கத்தின் கீழ் ஆகஸ்ட் 12, 2018 அன்று தொடங்கியது. அப்போது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த ஏப்ரல் மாதம் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் பிரதமராக பதியேற்றார். பதவியேற்றதற்கு பிறகுஒரு தொலைக்காட்சியில் பேசிய பிரதமர் ஷெரீப், நாட்டை வழிநடத்தும் "புனிதப் பொறுப்பு, அதன் நலனுக்காக உழைக்கும்" தனக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறி இருந்தார். இந்நிலையில், தற்போது, அவர் தனது அரசாங்கத்தின் பதிவிக்கால முடிவை அறிவித்துள்ளார். மேலும், அக்டோபர் அல்லது நவம்பரில் நடைபெற இருக்கும் அடுத்த தேர்தலுக்கான தேதியை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம்(ECP) அறிவிக்கும் என்றும் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.