Page Loader
நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தனது காதலரை மணந்தார்
நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தனது காதலரை மணந்தார்

நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தனது காதலரை மணந்தார்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 13, 2024
02:21 pm

செய்தி முன்னோட்டம்

நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன், தனது நீண்டகால காதலரான கிளார்க் கேஃபோர்டை இன்று காலை திருமணம் செய்து கொண்டார். நியூஸிலாந்து நாட்டின் மீது விதித்த ஜெசிந்தா விதித்திருந்த கடுமையான COVID-19 கட்டுப்பாடுகளினால், விழாக்கள் தடை செய்யப்பட்டிருந்தது. தற்போது விதிகள் தளர்த்தப்பட்ட காரணத்தால், ஜெசிந்தா தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளார். ஜெசிந்தா ஆர்டெர்ன்- கிளார்க் கெய்ஃபோர்ட் திருமணம், நியூசிலாந்தின் ஹேவ்லாக் நார்த் நகரில் நடைபெற்றது. 43 வயதான ஜெசிந்தா ஆர்டெர்ன், கிளார்க் கெய்ஃபோர்ட் என்பவரை பல ஆண்டுகளாக காதலித்து வந்தார். இவர்கள் இருவரும், கடந்த மே 2019இல் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். இவர்கள், 2022ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திருமணம் செய்து கொள்ளவிருந்தனர். ஆனால் கோவிட் கட்டுப்பாடுகள் காரணமாக திருமணத்தை தள்ளிவைத்து விட்டார்.

ட்விட்டர் அஞ்சல்

ஜெசிந்தா ஆர்டெர்ன் தனது காதலரை மணந்தார்