Loading...
என்விடியா CEO ஜென்சன் ஹுவாங் விவாகரத்து செய்தால் மனைவிக்கும் எவ்வளவு தொகையை கொடுக்க வேண்டும்?
ஜென்சன் ஹுவாங் 41 ஆண்டுகால குடும்ப வாழ்க்கை சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது

என்விடியா CEO ஜென்சன் ஹுவாங் விவாகரத்து செய்தால் மனைவிக்கும் எவ்வளவு தொகையை கொடுக்க வேண்டும்?

எழுதியவர் Venkatalakshmi V
Nov 10, 2026
10:16 am

செய்தி முன்னோட்டம்

என்விடியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங், சீன உளவு அமைப்பைச் சேர்ந்தவர் எனச் சந்தேகிக்கப்படும் ஆலிஸ் ஹுவாங் என்பவருடன் தனக்கு இருந்த தொடர்பை ஒப்புக்கொண்டு ஊழியர்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரியதைத் தொடர்ந்து, அவரது 41 ஆண்டுகால குடும்ப வாழ்க்கை சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. சுமார் $155 பில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் ₹13 லட்சம் கோடிக்கும் மேல்) சொத்து மதிப்புடன் உலகின் டாப் 10 கோடீஸ்வரர்களில் ஒருவராகத் திகழும் ஜென்சன் ஹுவாங் மற்றும் அவரது மனைவி லோரி ஹுவாங் இடையேயான திருமணம் விவாகரத்தில் முடிந்தால், இது உலகின் மிக விலையுயர்ந்த விவாகரத்து ஒப்பந்தமாக மாறக்கூடும்.

சட்டம்

கலிபோர்னியா கூட்டுச் சொத்து சட்டம்

ஜென்சன் ஹுவாங்கும், லோரியும் 1985-ஆம் ஆண்டு ஒரே கல்லூரியில் படித்த போது திருமணம் செய்துகொண்டனர்.

என்விடியா நிறுவனம் தொடங்கப்படுவதற்கு 8 ஆண்டுகளுக்கு முன்பே இவர்களது திருமணம் நடைபெற்றது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் வசித்து வரும் இவர்களுக்கு அம்மாநிலத்தின் குடும்பச் சட்டப் பிரிவு 760 பொருந்தும்.

கலிபோர்னியா சட்டப்படி, திருமண பந்தத்திற்குப் பிறகு ஈட்டப்பட்ட அனைத்துச் சொத்துகளும் தம்பதியருக்கு பொதுவானதாகவே கருதப்படும்.

திருமணத்திற்கு முன்பே சொத்துரிமை விலக்கு ஒப்பந்தம் எதுவும் செய்யப்படாத பட்சத்தில், விவாகரத்தின் போது மொத்தச் சொத்தும் கணவன்-மனைவி இடையே சமமாக பிரிக்கப்பட வேண்டும்.

செட்டில்மென்ட்

$80 பில்லியனுக்கும் மேல் (₹6.7 லட்சம் கோடி) செட்டில்மென்ட் தொகை?

ஜென்சன் ஹுவாங் மற்றும் லோரி தம்பதியர் அத்தகைய முன் திருமண ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனரா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

ஒருவேளை ஒப்பந்தம் எதுவும் இல்லாத பட்சத்தில், விவாகரத்து நடந்தால் தனது $155 பில்லியன் சொத்தில் பாதியான $77 பில்லியன் முதல் $80 பில்லியன் வரை (சுமார் ₹6.7 லட்சம் கோடி) லோரி ஹுவாங்கிற்கு செல்லக்கூடும்.

ADVERTISEMENT

ஒப்பீடு

உலக வரலாற்று சாதனை விவாகரத்து ஒப்பீடு

ஜெப் பெசோஸ் தனது மனைவி மெக்கென்சி ஸ்காட்டை 2019-ஆம் ஆண்டு பிரிந்த போது வழங்கப்பட்ட $38.3 பில்லியன் (சுமார் ₹3.2 லட்சம் கோடி) தொகையே இதுவரை உலக வரலாற்றில் அதிகபட்ச விவாகரத்து செட்டில்மென்ட்டாக இருந்து வருகிறது.

ஜென்சன் ஹுவாங்-லோரி பிரிவு சட்டப்பூர்வமாக நடந்தால், ஜெப் பெசோஸின் சாதனையை முறியடித்து இதுவே மிக விலையுயர்ந்த விவாகரத்தாக மாறும்.

ADVERTISEMENT