Loading...
மலேசியாவில் சுற்றுலா விசா மூலம் வேலை செய்யத் தடை: இந்திய பயணிகளுக்குத் தூதரகம் எச்சரிக்கை
மலேசியாவில் சுற்றுலா விசா மூலம் வேலை செய்யத் தடை

மலேசியாவில் சுற்றுலா விசா மூலம் வேலை செய்யத் தடை: இந்திய பயணிகளுக்குத் தூதரகம் எச்சரிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
Sep 22, 2026
07:11 pm

செய்தி முன்னோட்டம்

மலேசியாவிற்கு இலவச விசா சலுகையை பயன்படுத்தி செல்லும் இந்தியப் பயணிகள், சுற்றுலா விசாவை கொண்டு அங்கு வேலை தேடுவதோ அல்லது வேலை செய்வதோ சட்டவிரோதமானது என மலேசியாவிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் எச்சரித்துள்ளது. செப்டம்பர் 22, 2026 தேதியிட்ட அறிவிக்கையில், இலவச விசா வசதியை பயன்படுத்தி மலேசியா வரும் இந்தியர்கள் சிலர், அங்கு வேலை தேடும் நோக்கில் வருவதாக தூதரகம் கவலை தெரிவித்துள்ளது. போலியான ஏஜென்ட்டுகளின் வாக்குறுதிகளை நம்பி ஏமாறும் இந்தியர்கள், அங்குச் சென்ற பிறகு பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். சுற்றுலா விசாவில் மலேசியாவிற்கு சென்று வேலை செய்வது மலேசியக் குடிவரவுச் சட்டத்தின்படி குற்றமாகும். விதிகளை மீறி பணிபுரிபவர்கள் தடுத்து வைக்கப்படுதல், அபராதம், கைது நடவடிக்கை மற்றும் நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்கொள்வர்.

வேலை

மலேசியாவில் சட்டப்பூர்வமாக வேலை செய்வது எப்படி?

மலேசியாவில் பணிபுரிய விரும்புபவர்கள் இந்தியாவிலிருந்து புறப்படுவதற்கு முன்பே உரிய வேலைக்கான அனுமதியை பெற வேண்டும்.

தொழில் வல்லுநர்களுக்கான 'எம்ப்ளாய்மென்ட் பாஸ்', குறுகிய காலப் பணிகளுக்கான 'புரோபஷனல் விசிட் பாஸ்' அல்லது 'விசா வித் ரெஃபரன்ஸ்' (VDR) ஆகியவற்றைப் பெற வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம், தகுந்த கல்விச் சான்றுகள் மற்றும் மருத்துவப் பரிசோதனை சான்றிதழ் ஆகியவை அவசியமாகும்.

வழிகாட்டுதல்கள்

சுற்றுலாப் பயணிகளுக்கான முக்கிய வழிகாட்டுதல்கள்

சுற்றுலாவாக செல்லும் இந்தியர்கள் மலேசிய விமான நிலையத்தில் குடிவரவுத்துறைப் பிரச்சினைகளைத் தவிர்க்கப் பின்வரும் ஆவணங்களைக் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

உறுதிசெய்யப்பட்ட இருவழிப் பயணச்சீட்டு.

ஹோட்டல் முன்பதிவு விவரங்கள்.

குறைந்தபட்சம் 6 மாத காலம் செல்லுபடியாகும் பாஸ்போர்ட்.

பயணத்திற்கு 3 நாட்களுக்கு முன்பாகப் பூர்த்தி செய்யப்பட்ட மலேசியா டிஜிட்டல் வருகை அட்டை (MDAC).

போலியான வேலைவாய்ப்பு ஏஜென்ட்டுகளின் பொய் வாக்குறுதிகளை நம்பி சுற்றுலா விசாவில் வேலை தேட வேண்டாம் என்றும், தகுந்த விசா இன்றிச் சென்று ஆபத்தில் சிக்க வேண்டாம் என்றும் இந்திய உயர்ஸ்தானிகரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

ADVERTISEMENT

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT