NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீது துப்பாக்கி சூடு: பிரதமர் மோடி உட்பட உலக தலைவர்கள் கண்டனம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீது துப்பாக்கி சூடு: பிரதமர் மோடி உட்பட உலக தலைவர்கள் கண்டனம்
    பிரதமர் மீது துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர், சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார்

    ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீது துப்பாக்கி சூடு: பிரதமர் மோடி உட்பட உலக தலைவர்கள் கண்டனம்

    எழுதியவர் Venkatalakshmi V
    May 16, 2024
    12:00 pm

    செய்தி முன்னோட்டம்

    நான்கு முறை ஸ்லோவாக்கியாவின் பிரதமராக இருந்த ராபர்ட் ஃபிகோ மீது இன்று துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

    ஹாண்ட்லோவாவில் நடத்த அரசாங்க கூட்டத்திற்கு பின்னர், மக்களைச் சந்திக்கச் சென்றபோது ஃபிகோவை நோக்கி மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் பலமுறை சுட்டுள்ளார்.

    இதில், பிரதமர் ஃபிகோவின் வயிற்றில் படுகாயம் ஏற்பட்டு, இரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

    உடனே, அவரது பாதுகாவலர்கள் அவரை மருத்துவமனைக்கு விரைந்து அழைத்து சென்றனர்.

    பிரதமர் மீது துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர், சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார்.

    சந்தேகத்திற்குரிய நபர், 71 வயதான ஸ்லோவாக் கவிஞர் ஜுராஜ் சிந்துலா என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    ஃபிகோவின் ஊடகக் கொள்கைகள் மீது தனது வெறுப்பை காட்டவே சுட்டதாக அந்த நபர் தெரிவித்துள்ளார்

    கண்டனம்

    உலக தலைவர்கள் கண்டனம்

    ஸ்லோவாக்கிய பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீதான படுகொலை முயற்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை கண்டனம் தெரிவித்து, இது ஒரு கொடூரமான மற்றும் கோழைத்தனமான செயல் என்று கூறினார்.

    X இல் ஒரு பதிவில், ஸ்லோவாக்கிய பிரதமர் விரைவில் குணமடைய பிரதமர் மோடி வாழ்த்தினார்.

    இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடன், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் Ursula von der Leyen, இது போன்ற வன்முறைச் செயல்கள் ஜனநாயகத்தைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும், சமூகத்தில் இடமில்லை என்றும் கூறினார்.

    embed

     பிரதமர் மோடி  கண்டனம் 

    Deeply shocked at the news of the shooting at Slovakia's Prime Minister, H.E. Mr. Robert Fico. I strongly condemn this cowardly and dastardly act and wish PM Fico a speedy recovery. India stands in solidarity with the people of the Slovak Republic.— Narendra Modi (@narendramodi) May 16, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    துப்பாக்கி சூடு
    பிரதமர்
    பிரதமர் மோடி

    சமீபத்திய

    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ

    துப்பாக்கி சூடு

    பிபா மகளிர் உலகக்கோப்பை : கால்பந்து அணிகள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகே துப்பாக்கிச் சூடு கால்பந்து
    ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் ரயில்வே பாதுகாப்புப் படை கான்ஸ்டபிளால் 4 பேர் சுட்டுக் கொலை ரயில்கள்
    சென்னையில் பதற்றம் - என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 2 ரவுடிகள்  சென்னை
    ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் நடந்த துப்பாக்கி சூடு: உண்மையில் என்ன நடந்தது? மகாராஷ்டிரா

    பிரதமர்

    பாகிஸ்தான்: பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக புத்தாண்டு கொண்டாட்டங்களை ரத்து செய்த காபந்து பிரதமர் பாகிஸ்தான்
    பிரதமர் மோடியின் வருகையையொட்டி அயோத்தியில் உச்சகட்ட பாதுகாப்பு: என்எஸ்ஜி கமாண்டோக்கள், 5,000 போலீசார் குவிப்பு பிரதமர் மோடி
    லாலன் சிங் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, ஜேடியுவின் புதிய தலைவராக நிதிஷ்குமார் பொறுப்பேற்றார் நிதிஷ் குமார்
    ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் பங்கேற்பதை தவிர்க்க பிரதமர் வேண்டுகோள் அயோத்தி

    பிரதமர் மோடி

    அக்னி-5 ஏவுகணையின் முதல் சோதனையான திவ்யாஸ்திரத்தை பாராட்டினார் பிரதமர் மோடி  இந்தியா
    சென்னை-மைசூரு வந்தே பாரத் சேவை தொடக்கம் சென்னை
    பிரதமர் மோடியின் அருணாச்சலப் பிரதேச பயணத்தை விமர்சித்த சீனா: விமர்சனத்தை நிராகரித்தது இந்தியா இந்தியா
    பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரியில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு பிரதமர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025