
விசா ஸ்பான்சர்சிப் தருவதாக கனடாவில் சீக்கிய இளைஞர்களை ஈர்க்கும் காலிஸ்தானி ஆதரவாளர்கள்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் பஞ்சாபில் உள்ள சீக்கிய இளைஞர்களை விசா ஸ்பான்சர்சிப் தருவதாக, காலிஸ்தானி ஆதவாளர்கள் ஈர்ப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பஞ்சாபில் வறுமையில் இருக்கும் சீக்கிய இளைஞர்களுக்கு காலிஸ்தானி ஆதரவாளர்கள், விசா ஸ்பான்சர்ஷிப் வழங்கி காலிஸ்தானி இயக்கத்தில் சேர்த்துக் கொள்வதாகவும், அதற்காக இந்தியாவில் உள்ள குருத்வாராக்களை அவர்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும் பிடிஐ(PTI) செய்தி முகமை தகவல் வெளியிட்டுள்ளது.
இது மட்டுமன்றி கனடாவில் படிப்பு முடிந்து வேலை கிடைக்காத இளைஞர்களை குறி வைத்து, அவர்களுக்கு உதவி செய்து, அவர்களை காலிஸ்தானி ஆதரவாளர்களாக மாற்றுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மேலும் காலிஸ்தானிகள், கனடாவில் வேலை மற்றும் தங்க இடமில்லாமல் இருக்கும் இளைஞர்களை, குருத்வாராவில் தங்க வைத்து, அவர்களுக்கு சிறிய வேலைகளை வழங்கி போராட்டங்களில் ஈடுபடுத்தி வந்ததும் தெரியவந்துள்ளது.
2nd card
போராட்டங்களுக்கு காலாட்படையை பயன்படுத்தி வந்த நிஜார்
இப்படி ஈர்க்கப்படும் இளைஞர்களை, இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபடவும், காலிஸ்தானியக்கத்திற்கு ஆதரவு இருப்பதாக காட்டிக்கொள்ளவும் காலிஸ்தானிகள் பயன்படுத்தி வந்தனர்.
இவர்களை காலிஸ்தானிகள் காலாட்படையில் உபயோகித்து வந்துள்ளனர்.
காலிஸ்தானி இயக்க தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கடந்த ஜூன் மாதம் 18 ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டதில், இந்தியாவிற்கு தொடர்பு உள்ளது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கிடையே, பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ(ISI) அமைப்புடன் தொடர்பில் இருந்த சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் (Sikhs For Justice) என்னும் அமைப்பு நடத்திய பஞ்சாப் சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பிற்கு ஆதரவில்லாத நிலையில், நிஜ்ஜார் மற்றும் அவரது நண்பர்கள் இந்த 'காலாட்படை' பயன்படுத்தி காலிஸ்தானி இயக்கத்திற்கு ஆதரவு இருந்தது போல் சித்தரித்துள்ளனர்.
3rd card
முப்பதுக்கும் மேற்பட்ட குருதுவாரக்களை கட்டுப்பாட்டில் வைத்துள்ள காலிஸ்தானிகள்
காலிஸ்தானிகள் கனடாவின் சர்ரே, பிராம்ப்டன், எட்மண்டன் உள்ளிட்ட பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட குருத்வாராக்களை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
மேலும் அவர்களுக்கு குருத்வாராவில் பதிஸ் மற்றும் ராகிஸ் போன்ற பணிகளையும் வழங்கி அங்கேயே தங்கவும் வைத்துள்ளனர்.
இது அவர்களது வேலையை சுலபமாக்குகிறது.
காலிஸ்தானிகள் இந்தியாவில் உள்ள குருத்வாரக்களுடனும், பஞ்சாபில் உள்ள ரவுடிகளுடனும் தொடர்பில் உள்ளனர்.
இதன் மூலம் காலிஸ்தான் பிரிவினைவாதத்தை இந்தியாவில் உள்ள சீக்கிய இளைஞர்களிடமும் அவர்கள் விதைக்கின்றனர் என பிடிஐ(PTI) வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.