NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / தாக்குதலை நிறுத்தக் கோரிய ஐநாவின் கோரிக்கையை நிராகரித்த இஸ்ரேல்: ஐநா பொதுச் செயலாளரை பதிவி விலகவும் கோரிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    தாக்குதலை நிறுத்தக் கோரிய ஐநாவின் கோரிக்கையை நிராகரித்த இஸ்ரேல்: ஐநா பொதுச் செயலாளரை பதிவி விலகவும் கோரிக்கை
    தாக்குதலை நிறுத்தக் கோரிய ஐநாவின் கோரிக்கையை நிராகரித்த இஸ்ரேல்

    தாக்குதலை நிறுத்தக் கோரிய ஐநாவின் கோரிக்கையை நிராகரித்த இஸ்ரேல்: ஐநா பொதுச் செயலாளரை பதிவி விலகவும் கோரிக்கை

    எழுதியவர் Prasanna Venkatesh
    Oct 25, 2023
    11:40 am

    செய்தி முன்னோட்டம்

    அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்பு தாக்குதல் தொடர்ந்ததையடுத்து, 19வது நாளாக இரு நாடுகளுக்கு இடையேயான போர் நீடித்து வருகிறது.

    இந்நிலையில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த காசா ஸ்ட்ரிப் மீது தரைவழி படையெடுப்பைத் தொடங்க தாங்கள் ஆயுத்தமாக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் இஸ்ரேலைச் சேர்ந்த லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்சி ஹாலெவி.

    மேலும், எந்த நேரத்தில் தரைவழி படையெடுப்பைத் தொடங்க வேண்டும் என்பது குறித்து உயரதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்திருக்கிறார் ஹெர்சி ஹாலெவி.

    இதற்கிடையில் இஸ்ரேல் தரைவழி படையெடுப்பை தாமதப்படுத்தி வருவதற்கு அமெரிக்கா காரணமா என ஜோ பிடனிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, "தங்களுக்கான முடிவுகளை இஸ்ரேலே எடுத்துக் கொள்ளும்" எனப் பதிலளித்திருக்கிறார் அவர்.

    இஸ்ரேல்-பாலஸ்தீனம்

    ஐநா பொதுச்செயலாளரை பதவி விலகக் கோரிய இஸ்ரேல் தூதுவர்: 

    உயர் மட்ட அளவில் காஸா மீதான தாக்குதலை நிறுத்தக் கோரிய ஐநாவின் கோரிக்கையை இஸ்ரேல் நிராகரித்திருப்பதோடு, ஐநாவின் பொதுச் செயலாளரான ஆண்டானியோ குட்டுரெஸ் பதவி விலக வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார் ஐநாவுக்கான இஸ்ரேல் தூதுவர் கிலாட் எர்டான்.

    இஸ்ரேலின் குழந்தைகள் மீதும், பெண்கள் மீதும், முதியவர்கள் மீதும் தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், இங்கிருக்கும் நிலைமயை புரிந்து கொள்ளாத ஐநா பொதுச் செயலாளர் பதவி விலக வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார் அவர்.

    இஸ்ரேல் குடிமக்கள் மீதும், யூத இன மக்கள் மீதும் தாக்குதல் நடத்துபவர்கள் மீது அனுதாபம் காட்டுபவர்கள், யாரிடமும் பேச தயாராக இல்லை என ஐநா பொதுச்செயலாளரை தாக்கி எக்ஸ் பக்கத்திலும் கருத்து பதிவிட்டிருக்கிறார் அவர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    ஐநா சபை
    அமெரிக்கா

    சமீபத்திய

    இ சாலா கப் நம்தே! முதல்முறையாக IPL கோப்பையை வென்றது RCB ஐபிஎல் 2025
    லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் நிவின் பாலி லோகேஷ் கனகராஜ்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி: ஆர்சிபி அணிக்கு எதிராக பீல்டிங் தேர்வு செய்த பிபிகேஎஸ்!  ஐபிஎல் 2025
    இந்தியாவிற்கு எதிராக திட்டமிடப்பட்ட 48 மணி நேர தாக்குதல் திட்டத்தை 8 மணி நேரத்திலேயே நிறுத்திய பாகிஸ்தான்; ஏன்? இந்திய ராணுவம்

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    'இஸ்ரேல் காசாவை கைப்பற்ற நினைப்பது பெரும் தவறு': அமெரிக்க அதிபர்  அமெரிக்கா
    காசாவை விட்டு வெளியேறிய 1 மில்லியன் மக்கள்: தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல் இஸ்ரேல்
    இஸ்ரேல்-ஹமாஸ் போர் மத்திய கிழக்கு நாடுகளில் பரவாமல் இருப்பதை உறுதி செய்யும் அரபு நாடுகள்  இஸ்ரேல்
    இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹமாஸ் தலைவர்: யாரிந்த யாஹ்யா சின்வார்? இஸ்ரேல்

    ஐநா சபை

    சிரியா நிலநடுக்கம்: இடிபாடுகளுக்குள் தன் தம்பியை பாதுகாத்த 7 வயது சிறுமி உலக செய்திகள்
    நித்யானந்தாவை இந்தியா தொடர்ந்து துன்புறுத்துகிறார் - ஐநா.,வில் கைலாசா பிரதிநிதி புகார் உலக செய்திகள்
    உலகில் 26% பேருக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை: ஐநா அறிக்கை உலகம்
    மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்குத்தள்ளிய இந்தியா - ஐ.நா அறிக்கை  இந்தியா

    அமெரிக்கா

    பேச்சுவார்த்தை தோல்வி- தொடரும் ஹாலிவுட் நடிகர்களின் வேலை நிறுத்தம்  நடிகர்
    இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்த போவதை முன்பே கணித்த அமெரிக்க உளவுத்துறை  இஸ்ரேல்
    ஆப்கானிஸ்தானில் ஒரு வாரத்திற்குப் பிறகு அதே பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்  ஆப்கானிஸ்தான்
    பணவீக்கம் உலகளவில் உள்ள குழந்தைகளை எவ்வாறு பாதிக்கிறது? உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025